தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பாரதிராஜா மற்றும் லோகேஷ் கனராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய லோகேஷ் கனகராஜ்," பாரதிராஜா சாரை என் வாழ்நாளில் ஒரு முறை தான் பார்த்திருக்கிறேன். இந்த நிகழ்ச்சியின் மூலம் அவருடன் அருகில் அமரும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உணர்கிறேன். என்னுடைய முதல் படம் துவங்கி இப்போது 'விக்ரம்' வரையிலும் பத்திரிக்கையாளர்களின் பங்கு என் வாழ்நாளில் நிச்சயம் ஈடு செய்ய முடியாதது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கும் சிம்பு?


இதை மாநகரம் சந்திப்பில் கூட சொல்லியிருந்தேன் இந்த படத்தில் நடித்தவர்கள் பலரையும் மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை பத்திரிக்கையாளர்களான உங்களால் மட்டுமே இந்த படத்தை கொண்டு போய் சரியான முறையில் சேர்க்க முடியும் என தெரிவித்திருந்தேன்.  அதன்படி பத்திரிகையாளர்கள் எனக்கு கொடுத்த ஆதரவு தான் இன்று இப்போது இந்த இடத்தில் நான் நிற்க காரணம்" எனத் தெரிவித்தார். 



அவரைத் தொடர்ந்து பேசிய பாரதிராஜா, " பல வருடங்களாக சினிமா பத்திரிக்கையாளர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். தற்போது விமர்சனம் செய்வதில் நிறைய மாற்றங்கள் உண்டாகி இருக்கின்றன. விமர்சனம் திட்டாமல் மனம் நோகாமல் விமர்சனம் செய்வதை இக்கால தலைமுறையினர் கடைபிடிக்கின்றனர். லோகேஷ் கனகராஜ்  நான்கே படங்களில் நான்கு திசைகளையும் திரும்பிப் பார்க்க வைத்து விட்டார். விக்ரம் படம் பார்த்துவிட்டு அவருக்கு அழைத்து பேசினேன். அவரைப் பார்த்தது கூட இல்லை விக்ரம் படத்திற்கு பிறகு தான் அவருடைய முந்தைய படங்களை பற்றி தெரிந்து கொண்டேன். ஏராளமான கனவுகளும் கற்பனைகளும் சூழ உள்ளே வந்த லோகேஷ் கனகராஜிடம் மிகப்பெரிய கலை ஞானம் உள்ளது. 


கமல் ஒரு அற்புதமான கலைஞர் சினிமாவிற்காக பல விஷயங்களை இழந்திருக்கிறார். அப்படிப்பட்டவருக்கு இப்படி ஒரு படம் தான் இதுவரை இழந்த அத்தனையையும் முதலீடாக அள்ளிக் கொடுத்திருக்கிறது. அதற்குக் காரணம் லோகேஷ் கனகராஜ் தான். இப்படியான இயக்குனர்கள் எல்லாம் பார்க்கும் பொழுது இவர்களுடன் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் இப்போது வரை அடங்கவே இல்லை. நான்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன், இரண்டு படங்களுக்கான கதைகள் எழுதி முடித்து விட்டேன். லோகேஷ் கனகராஜ் போன்ற இளம் இயக்குனர்களுடன் சேர்ந்து ஓட வேண்டும் என்ற நோக்கத்தில் இப்போதும் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறேன்" எனத் தெரிவித்தார். 


மேலும் படிக்க | தனுஷிடம் இருக்கும் 5 ஆடம்பர சொகுசு கார்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ