பிக் பாஸ் தமிழ் 5: `புத்திசாலினு சொல்லி தள்ளாதிங்க` அண்ணாச்சியுடன் மோதும் அபிஷேக்
Bigg Boss Tamil Season 5: அபிஷேக், கோவமாக அண்ணாச்சியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபடுகிறார். எனக்கெல்லாம் பிரச்சனையே இல்ல.. வெளியே போனாலும் பரவாவில்லை.
Bigg Boss Tamil Season 5: விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் 4 சீசன்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதை அடுத்து, தற்போது பிக் பாஸ் தமிழ் (Bigg Boss Tamil) நிகழ்ச்சியின் 5வது சீசன் பிரம்மாண்டமாக 18 போட்டியாளர்களுடன் கடந்த வாரம் தொடங்கி அதிக பார்வையாளர்களுடன் வெற்றிகரமாக நடந்து வருகிறது. அதேநேரத்தில் இந்த நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரிலும் (DisneyPlus Hotstar) ஒரு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
'உலகநாயகன்' கமல்ஹாசன் தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக இந்த ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் தொடங்கிய பிக் பாஸ் தமிழ் 5வது சீசனில் அபினய் வாடி, அபிஷேக் ராஜா, அக்ஷரா ரெட்டி, சின்னப்பொண்ணு, சிபி சந்திரன், இமான் அண்ணாச்சி, இசைவாணி, ஐக்கி பெர்ரி, மதுமித , நாடியா சாங், நமீதா மாரிமுத்து, நிரூப் நந்தகுமார், பவ்னி ரெட்டி, பிரியங்கா தேஷ்பாண்டே, ராஜு ஜெயமோகன், ஸ்ருதி ஜெயதேவன், தாமரை செல்வி மற்றும் வருண் ஆகியோர் பங்கேற்றனர்.
நமீதா மாரிமுத்து, பாவ்னி ரெட்டி மற்றும் தாமரை செல்வி மூன்று பெரும் வெளியேறியதால், இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, சின்ன பொண்ணு, அபிஷேக் ராஜா, சிபி சந்திரன், பிரியங்கா, அபினய் வாடி, வருண், இமான் அண்ணாச்சி, நாடியா சங், ஐக்கி பெர்ரி, நிரூப் நந்தகுமார், ஸ்ருதி, அக்ஷரா ஆகிய 15 போட்டியாளர்கள் இடம் பெற்றிருதன்ர்.
சனி மற்றும் ஞாயிறு என வாரத்தில் இரண்டு நாட்கள் கமல்ஹாசன் நிகழ்ச்சியினை தொகுப்பு வழங்கி வருகிறார். கடந்த வாரம் நாடியா சிங் வெளியேறியது அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது.
ALSO READ | Biggboss 5: பிக்பாஸ் நிகழ்ச்சியில் திருநங்கை நமீதாவின் கண்ணீரும், கலைஞர் கருணாநிதியும்
இன்று காலை வெளியான முதல் ப்ரோமோவில், பாவ்னி ரெட்டி முதல் முறையாக நியமன பட்டியலில் இருந்தார். இந்த விளம்பர வீடியோவைப் பார்த்தவுடன், இணை போட்டியாளர்கள் பாவ்னி ரெட்டியை குறிவைப்பது போல் தெரிகிறது. ஆனால் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில், வீட்டின் இரண்டாவது தலைவரை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெறுகிறது. இந்த பணியில் அபிஷேக் மற்றும் நிரூப் பெண்கள் போல வேடமிட்டுள்ளனர். "உணர்வு என்பது என்ன" என்ற பெயரில் டாஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளது.
இசைவாணியுடன் கேலியாக விளையாடத் தொடங்கிய அபிஷேக், குழந்தை பருவத்திலிருந்தே நீங்கள் கஷ்டப்பட்டது போதாதா? நீங்கள் மிகவும் கடினமாக உழைத்து இந்த பணியில் வெற்றி பெற விரும்புகிறீர்களா? ஒரு சட்டை வாங்குவது கூட எவ்வளவு கடினம் என்று இசைவாணிடம் பேசுகிறார். இதைகேட்ட இமான் அண்ணாச்சி, ஒரு டாஸ்க் செய்யும் போது இப்படி அவர்களிடம் பேசக்கூடாது, அவர்களை சிரிக்க வைக்க வேண்டும் என அறிவுரை கூறுகிறார். அதற்கு கோபமடைந்த வருண், நாங்கள் யாரையும் காயப்படுத்தவில்லை. அது எங்க வேலையும் இல்லை எனக்கூறுகிறார்.
ALSO READ | நாமினேஷன் பட்டியலில் ப்ரியங்கா; புதிய ப்ரோமோ வெளியீடு
மறுபுறம் அபிஷேக், கோவமாக அண்ணாச்சியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபடுகிறார். எனக்கெல்லாம் பிரச்சனையே இல்ல.. வெளியே போனாலும் பரவாவில்லை. எனக்கு வலு இருக்கிறது. வெளியே போய் ஏதாவது பண்ணிக்குவேன் என செம டென்சனாக பஞ்சு டயலாக் எல்லாம் பேசுகிறார். பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இன்று என்ன நடந்தது என்பதை அறிய இரவு வரை காத்திருப்போம்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR