தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களின் ஒருவரான விஜயை வைத்து படத்தினை இயக்கவும், தயாரிக்கவும் அனைவரும் போட்டி போட்டு கொண்டுள்ளனர்.  ஆனால் சிலருக்கு மட்டுமே அந்த வாய்ப்பு நிறைவேறுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்தவகையில் விஜயின் அடுத்த படமான தளபதி 66 படத்தினை தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்க உள்ளதாகவும், தில்ராஜ் மற்றும் ஷிரிஷ் இணைந்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனத்தின் கீழ் தயாரிக்க உள்ளதாகவும் அதிகார பூர்வமாக அறிவித்து உள்ளனர். 



தெலுங்கில் மிக பெரிய இயக்குனரான வம்சி மகேஷ் பாபு, ராம் சரண், நாகசைதென்யா, ஜுனியர் என்டிஆர் என பல முன்னணி நடிகர்களை வைத்து ஹிட் படங்களை கொடுத்துள்ளார். 


விஜய்யின் சமீப கால கதை தேர்வு அனைவரையும் ஆச்சர்யப்படுத்துகிறது.  புது முக இயக்குனர்களுக்கு அதிகமாக வாய்ப்புகளை வழங்குகிறார் விஜய்.  அட்லீ தொடங்கி, லோகேஷ் வரை ஒரு படம் எடுத்த இயக்குனர்களுக்கு வாய்ப்பை வழங்குகிறார்.   மாஸ்டர் படம் முடிந்த பின்பு விஜயின் அடுத்த படத்தை யார் இயக்க போகிறார்கள் என்ற கேள்வி நீண்ட நாட்களாக இருந்தது.  மீண்டும் முருகதாஸுடன் இணையவுள்ளார் என்றும் தகவல்கள் வந்த நிலையில் யாரும் எதிர் பார்க்காத விதமாக நெல்சன் உள்ளே வந்தார்.


தற்போது பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு வெகு விரைவாக நடைபெற்று வருகிறது.  கிட்டத்தட்ட 80% படப்பிடிப்புகள் நிறைவடைந்து விட்டதாக கூறப்படுகிறது .  விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து வெளியீட்டு தேதி அறிவிக்க படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.


ALSO READ அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் எச்சரிக்கை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR