இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார்? அந்த குரூப் ஆ இருக்குமோ
BB 7 Tamil Elimination: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இதுவரை ஏழு போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அதன்படி இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகப் போகும் போட்டியாளர் யார் என்பதை பார்ப்போம்.
பிக் பாஸ் சீசன் 7 எலிமினேஷன்: தமிழ்நாட்டை தாண்டி, இந்திய அளவில் ட்ரெண்டிங்கிள் உள்ள ரியாலிட்டி நிகழ்ச்சிகளுள் ஒன்று பிக்பாஸ். தமிழில் 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, தறப்போது 7வது சீசனில் (Bigg Boss 7 Tamil) அடியெடுத்து வைத்துள்ளது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். இதில், வாரா வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்ட காலம் மலையேறி, வாரம் இரண்டு போட்டயாளர்கள் போட்டியில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர்.
புது ரூல்ஸ்களுடன் பிக்பாஸ் போட்டியாளர்கள்:
பிக்பாஸ் நிகழ்ச்சியில் (Bigg Boss Tamil 7) அனைத்து சீசன்களிலும் புதுப்புது ரூல்ஸ்கள் விதிக்கப்படுவதை தொடர்ந்து, இந்த சீசன் வீட்டின் அமைப்பே மொத்தமாக மாற்றப்பட்டுள்ளது. பிக்பாஸ் வீடு-ஸ்மால் பாஸ் வீடு என இரண்டு வீடுகளாக இந்த சீசன் பிரிக்கப்பட்டுள்ளது. இதில், பிக்பாஸ் விதிக்கும் சில ரூல்ஸ்களின் அடிப்படையில் 6 பேர் ஸ்மால் பாஸ் இல்லத்திற்குள் அனுப்பப்படுகின்றனர். இதனால், பிக்பாஸ் வீட்டாளர்கள் மற்றும் ஸ்மால் பாஸ் வீட்டாளர்கள் என போட்டியாளர்கள் இரு துருவங்களாக பிரிந்திருக்கின்றனர். இதில், சில நாட்களுக்கு முன்னர் ஸ்மால் பாஸ் இல்லத்திற்குள் 5 வைல்ட் கார்ட் போட்டியாளர்களும் (BB 7 Wild Card Contestants) அனுப்பி வைக்கப்பட்டனர்.
பிக் பாஸ் இல் இருந்து வெளியான போட்டியாளர்களின் விவரம்:
தொடர்ந்து நிகழ்ச்சியிலிருந்து அனன்யா, விஜய் வர்மா, யுகேந்திரன், வினுஷா, பிரதீப், அன்னபாரதி என 6 பேர் எலிமினேட் செய்யப்பட்டனர். பவா செல்லதுரை தானே விரும்பி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.
சர்ச்சைகளை ஏற்படுத்திய எலிமினேஷன்:
இதனிடையே கடந்த வாரத்தில் பிரதீப்பின் எலிமினேஷன் பிக்பாஸ் போட்டியாளர்களிடம் மட்டுமின்றி வெளியிலும் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இவர் சமீபத்திய எபிசாேட் ஒன்றில் கூல் சுரேஷை மரியாதை குறைவாக பேசினார், தகாத வார்த்ததைகளால் திட்டினார். இதற்கு தன்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் பேசினார். இதனால் உரிமை குரல் எழுப்பிய சக பிக்பாஸ் போட்டியாளர்களில் சிலர், பிரதீப் இருப்பதால் தாங்கள் பாதுகாப்பின்மையாக உணர்வதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர் ரெட் கார்டு (Pradeep Antony Red Card) கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
வெளியேறப்போகும் போட்டியாளர்:
இந்நிலையில் இந்த வாரம் நாமினேஷன் டாஸ்க்கில் ஐஷூ, விசித்ரா, அர்ச்சனா, வி.ஜே பிராவோ, பூர்ணிமா, தினேஷ் ஆகியோர்கள் சிக்கி உள்ளனர். இவர்களில் அதிக வாக்குகளை பெற்று அர்ச்சனா முதலிடத்திலும் இரண்டாவது இடத்தில் விசித்ராவும் உள்ளனர். அடுத்த இடத்தில் தினேஷ், ப்ராவோ இருக்க கடைசியாக பூர்ணிமா (Poornima Ravi), ஐஷூ இவர்கள்தான் குறைவாக வாக்குகளை பெற்றுள்ளனர். எனவே இந்த வாரம் பூர்ணிமா, ஐஷூ இவர்களில் ஒருவர் தான் கட்டாயம் வெளியேறப் போவதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | கமல்ஹாசனின் ஆபிஸ் ரூமை பார்த்துள்ளீர்களா..? ‘இந்த’ வீடியோவில் பாருங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ