வனிதா Vs ஜூலி: களைகட்டப்போகும் பிக்பாஸ் அல்டிமேட்..!
பிக்பாஸ் அல்டிமேட்டில் 3வது போட்டியாளராக அறிவிக்கப்பட உள்ளார் வனிதா விஜயக்குமார்.
பிக்பாஸ் சீசன் 5 அண்மையில் முடிவடைந்த நிலையில், சுடச்சுட களமிறக்கப்படுகிறது ’பிக்பாஸ் அல்டிமேட்’. 24 மணி நேரமும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகவுள்ள இந்த ஷோ ஜனவரி 30 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. கடந்த 5 சீசன்களில் போட்டியாளர்களாக கலந்து கொண்டவர்கள், இந்தப் போட்டியில் மீண்டும் களமிறக்கப்பட உள்ளனர். மொத்தம் 60 நாட்கள் இந்த ஷோ ஒளிபரப்பப்பட உள்ளது.
ALSO READ | எல்லாரையும் ஓடவிட வருகிறார் ஜூலி! மீண்டும் பிக் பாஸில்!
சீசன் ஒன்றில் கலந்து கொண்ட சிநேகன் முதல் போட்டியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வித்தியாசமான ப்ரோ மூலம் அவரை பிக்பாஸ் அறிமுகப்படுத்தியுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக 'ஜல்லிக்கட்டு போராட்ட புகழ்' ஜூலி 2வது போட்டியாளராக களமிறங்கியுள்ளார். அவரை சாதாரணமாக ஒரு போட்டோஷூட் மூலம் பிக்பாஸ் அறிமுகப்படுத்தியதால், ஜூலி ரசிகர்கள் இப்போதே பஞ்சாயத்தை தொடங்கிவிட்டனர். சிநேகனுக்கு மட்டும் ப்ரோமோ? ஜூலிக்கு ஏன் இல்லை? என இணையத்தில் அதகளப்படுத்தி வருகின்றனர்.
அவர்களை ஆஃப் செய்யும் விதமாக அடுத்த ஃப்ரோமோவை வெளியிட்ட பிக்பாஸ், 3வது போட்டியாளரை யூகியுங்கள் என தெரிவித்தார். பிக்பாஸின் ’ஜக்கம்மா’ ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்கள் அடுத்த நொடியே வனிதாவின் போட்டோவை போட்டு இவர் தான் அடுத்த போட்டியாளர் என கூறிவிட்டனர். இந்நிலையில், 3வது போட்டியாளராக ’வனிதாவை பிக்பாஸ் அறிமுகப்படுத்தியுள்ளார். இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தலைவி வனிதாவா? இல்லை ஜூலி ஆர்மியா? என பார்த்துக் கொள்ளலாம் என மீம்ஸ்களை பட்டை தீட்டத் தொடங்கியுள்ளனர். எது எப்படியோ... ஜூலி VS வனிதா போட்டியைக் காண ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
ALSO READ | Bigboss: முன்னாள் டைட்டில் வின்னரை அழைக்காத பிக்பாஸ் டீம்..! ஏன்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR