Bigboss: முன்னாள் டைட்டில் வின்னரை அழைக்காத பிக்பாஸ் டீம்..! ஏன்?

கடந்த முறை டைட்டிலை வென்ற தன்னை, இந்தமுறை நடைபெற்ற பைனலுக்கு அழைக்கவில்லை என ஆரி அர்ஜூனன் உருக்கமாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார்

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 1, 2023, 10:22 PM IST
Bigboss: முன்னாள் டைட்டில் வின்னரை அழைக்காத பிக்பாஸ் டீம்..! ஏன்? title=

நூறு நாட்களை கடந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஞாயிற்றுகிழமையான இன்றுடன் முடிவுக்கு வருகிறது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த பிக்பாஸில் ராஜூ, பிரியங்கா, பாவனி, அமீர், நிரூப் ஆகிய 5 போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். யார் அந்த டைட்டில் வின்னர்? என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் எபிசோடு இன்றிரவு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. ஆனால், சமூக வலைதளங்களில் பரவியுள்ள தகவலின் அடிப்படையில், ராஜூ டைட்டில் வின்னராக தேர்தெடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 2வது இடத்தை பிரியங்காவும், 3வது இடத்தை பாவனியும் பிடித்துள்ளனர்

ALSO READ | நடிகர் விஜய் நண்பர்களுக்கு உதவமாட்டாரா- சஞ்சீவ் ஓபன் டாக் !

வைல்டு கார்டு என்ட்ரியாக வந்த அமீர் 4வது இடத்தையும், சவாலான போட்டியாளராக பார்க்கப்பட்ட நிரூப் 5வது இடத்தை பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விஜய் டிவியின் பிக்பாஸ் பைனல் நிகழ்ச்சிக்கு கடந்த முறை டைட்டில் வென்ற ஆரி அர்ஜூனன் அழைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக வருவார் என்ற தகவலும் உலாவிய நிலையில், இது குறித்து வெளிப்படையாக பதிவு ஒன்றை எழுதியுள்ளார் ஆரி.

அதில், கடந்த முறை டைட்டில் வென்ற தன்னை இந்தமுறை நடைபெறும் பிக்பாஸ் சீசன் 5 இறுதிப்போட்டிக்கு அழைப்பார்கள் என ஆவலுடன் காத்திருந்ததாக தெரிவித்துள்ளார். நடிகர் கமலை மீண்டும் சந்திக்கும் ஒரு வாய்ப்பு என நினைத்த நிலையில், விஜய் டிவியில் இருந்து தனக்கு எந்த அழைப்பும் வரவில்லை எனக் கூறியுள்ளார்.

ALSO READ | பிக்பாஸில் ’ஹிப்ஹாப் ஆதி’ - போட்டியாளர்கள் மகிழ்ச்சி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News