பிக் பாஸ் 5 இல் கலந்துகொள்ளப் போகும் பிரபலங்களின் பட்டியல் இதோ!
பிக் பாஸ் சீசன் 5 தமிழில் இல் கலந்து கொள்ளப்போவதாக பேச்சு வார்த்தை நடத்தி வரும் பிரபலங்களில் பட்டியல்
ஒரு தனியார் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் முடிவடைந்தது. இந்த சீசனில் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்து இருந்தனர். தமிழில் ஒளிபரப்பாவது போல ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என்று பல மொழிகளில் மலையாளம், பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த பிக் பாஸ் (Bigg Boss) ஐந்தாவது சீசன் ஜூலை முதல் திரையிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியை எண்டிமால் என்ற நிறுவனம் தான் தயாரித்தது. சர்வதேச அளவில் பெரிய தொலைக்காட்சி தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் விளங்கும் நிறுவனம் என்டமோல் ஷைன்.
ALSO READ | பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஷகிலாவின் மகள் பங்கேறப்பு- உறுதிசெய்த போட்டோ!
இதற்கிடையில் பிக் பாஸ் ஐந்தாவது (Bigg Boss Tamil 5) சீசனுக்கான போட்டியாளர்களை உறுதி செய்ய தற்போது தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. சினிமா, டிவி, யூடியுப் உள்ளிட்ட தளங்களில் மிகவும் பிரபலமாக இருக்கும் நபர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எனவே இந்த நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி, மன்சூரலி கான், பவித்ரா லக்ஷ்மி, சுனிதா, கனி, உள்ளிட்டோர் இடமும் பிக் பாஸ் 5 வது சீசனில் கலந்து கொள்ள பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 5 இல் கலந்து கொள்ளப்போவதாக பேச்சு வார்த்தை நடத்தி வரும் பிரபலங்களில் பட்டியல் இங்கே:
1. சுனிதா
2. பவித்ரலட்சுமி
3. கனி
4. ராதா ரவி
5. மன்சூரலி கான்
6. மிளா (ஷகிலா மகள்)
7. சோனா
8. லட்சுமி ராமகிருஷ்ணன்
9. லட்சுமி மேனன்
10. பூனம் பஜ்வா
11. ராதா
போன்றவர்கள் கலந்து கொள்ள போவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR