Bigg Boss Tamil Season 5: தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் (Bigg Boss Tamil) நிகழ்ச்சியின் 4 சீசன்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் (Kamalhaasan) தொகுத்து வழங்கினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5 வது (Bigg Boss Tamil) சீசன் இன்று முதல் பிரம்மாண்டமாக தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த விவரங்களை அவ்வப்போது வெளியாகி வருகிறது. மேலும் இந்த நிகழ்ச்சி தொடர்பாக அவ்வப்போது புரோமோக்கள் வெளியாகி வந்தது. அப்படி முதல் புரோமோவில் பிக் பாஸ் சீசன் 5 லோகோவை அறிமுகம் செய்து வைத்தார் கமல்ஹாசன் (Kamalhaasan).


ALSO READ | Bigg Boss Tamil Issue: பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும்: பாஜக புகார்


இந்நிலையில் மாலை 6 மணிக்கு துவங்கும் இந்நிகழ்ச்சி இரவு 11 மணி வரை நடைபெற உள்ளது. மேலும் நேற்று, பிக்பாஸ் துவக்க விழாவிற்கான ஷுட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இறுதி போட்டியாளர்கள் பட்டியல் வெளியாகி வருகிறது.


இதற்கிடையில் இதுவரை கன்ஃபார்ம் போட்டியாளர்களாக கானா பாடகியான இசைவாணி, நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட சீரியல்களில் நடிக்கும் ராஜு ஜெயமோகன், பிரபல தொகுப்பாளர் அபிஷேக் ராஜா, காஸ்ட்யூம் டிசைனர் மதுமிதா ஆகிய நான்கு பேரின் பெயர்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையில் மலேசிய பிரபல மாடல் நதியா சாங்கும் தனக்கு ஆதரவு தருமாறு வீடியோ வெளியிட்டுள்ளார்.


மேலும் ஐந்தாவது கன்ஃபார்ம் போட்டியாளராக நமீதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளாராம். ஏற்கனவே நடிகை ஷகீலாவின் மகளும் திருநங்கையுமான மிலா பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்வதாக கூறப்படும் நிலையில், தற்போது நமீதா மாரிமுத்துவின் பெயர் கன்ஃபார்ம் போட்டியாளராக சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | Bigg Boss Tamil Season 5: இரண்டாவது புரொமோ வீடியோ வெளியானது; கசிந்தது முக்கிய தகவல்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR