விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கிவிட்டது. ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தொலைக்காட்சி ரசிகர்களிடையே பிரபலமான இவர், தற்போது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலும் நுழைந்திருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கவர்ச்சி கதாப்பாத்திரங்களில் விசித்ரா:


தமிழ் சினிமா ரசிகர்கள், தற்போது இருக்கும் கதாநாயகிகளை கூட மறந்து விடுவார்கள். ஆனால், 15-20 வருடங்களுக்கு முன்னர் திரைத்துறையில் சின்ன சின்ன கவர்ச்சி கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தவர்களை கண்டிப்பாக மறந்திருக்க மாட்டார்கள். அப்படி மறக்க முடியாத நாயகிகளுள் ஒருவர், விசித்ரா. இவர், 1992ஆம் ஆண்டு வெளியான தலைவாசல் படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். தொடர்ந்து, ரசிகன் படத்திலும் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 


இவரது கதாப்பாத்திரம் பெரிதாக பேசப்பட்டது முத்து படத்தில்தான். இந்த படத்தில், கண்ணனை கணவில் பார்க்கும் பெண்ணாக நடித்து இன்றும் மீம் மெட்டீரியலாக உலா வருகிறார். அதன் பிறகு சுயம்வரம் படத்திலும் நடித்தார். சில ஆண்டுகள் படங்களில் இருந்து விலகி தொலைக்காட்சி தொடர்களில் கவனம் செலுத்தி வந்தார். தெலுங்கு மற்றும் தமிழ் படங்களிலும் தொடர்களிலும் மாறி மாறி நடித்து வந்த இவர், போன குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலரையும் தனது சமையல் திறமையால் கவர்ந்திருந்தார். 


மேலும் படிக்க | பிக்பாஸ் வாய்ஸிற்கு பின்னால் இருக்கும் மர்ம நபர் யார்? அட ‘இந்த’ நடிகரா அது..?


விசித்ராவின் சோக கதை:


நடிகை விசித்ரா, தனது வாழ்க்கை குறித்து ஒரு நேர்காணலில் பேசியிருந்தார். அதில், தான் ஏன் கவர்ச்சி கதாப்பாத்திரங்களில் நடிக்க வந்தேன் என்பது குறித்து கூறியிருந்தார். மேலும், தான் கவர்ச்சி கதாப்பாத்திரங்களில் நடிப்பதை நிறுத்த என்ன காரணம் என்றும் தெரிவித்திருந்தார். 


விசித்ராவிற்கு உடன் பிறந்தவர்கள் 3 பேர். இரண்டு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர். குடும்ப சூழல் காரணமாக விசித்ரா மிகவும் இளம் வயதிலேயே படங்களில் நடிக்க வந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது தந்தை 2011ஆம் ஆண்டு தங்களது பண்ணை வீட்டில் திருடர்களால் கொலை செய்யப்பட்டதாகவும் அதிலிருந்து இப்போதுதான் தான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 


விசித்ரா, தனது முதல் படத்தில் தன்னை விட 15 வயது மூத்த பெண்ணின் கதாப்பாத்திரத்தில் நடித்தாராம். அப்போது தன்னை “ஏன் எப்போதும் கவர்ச்சி கதாப்பாத்திரங்களின் நடிக்கிறாய்?” என பலர் கேட்டதாகவும் அப்போது தனக்கு ஒன்றும் தெரியாமல் இருந்ததால் சினிமா துறையினர் தன்னை உபயோகப்படுத்தி கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். “இப்போது தமன்னாவும் அதையேதான் செய்கிறார், ஆனால் அவரது கதாப்பாத்திரத்தை அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர்” என்றும் அந்த நேர்காணலில் அவர் குறிப்பிட்டிருந்தார். 


மனநல ஆலோசகராக விசித்ரா:


விசித்ரா சினிமாவில் நடிக்க வந்துவிட்டதால் பள்ளிப்படிப்ப பாதியிலேயே நிறுத்துயிருக்கிறார். திருமணம் ஆனவுடன் அந்த படிப்பை மீண்டும் தொடர்ந்து, தொலை தூர கல்வி மூலம் சைக்காலஜி வரை படித்த அவர், தற்போது தனது மகனின் பள்ளியிலேயே கவுன்ஸிலிங் கொடுப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இவர் பிக்பாஸில் சமீபத்தில் சக போட்டியாளர் ஒருவர் ஷாட்ஸ் போட்டிருந்தது குறித்து பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையாக மாறி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவரும் ஒரு முக்கிய போட்டியாளராக பார்க்கப்படுகிறார். 


மேலும் படிக்க | வந்த இரண்டே நாளில் ஆறு பேரை வீட்டை விட்டு வெளியேற்றிய பிக்பாஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ