கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 7 பாேட்டியில் இருந்து, அனைவருக்கும் பிடித்த போட்டியாளர் ஒருவர் வெளியேறியிருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிக்பாஸ் 7:


பிக்பாஸ்’ என்ற பெயரில் இந்தியில் 17 சீசன்களை கடந்து இந்நிகழ்ச்சி நடைப்பெற்று வருகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு, தமிழில் இந்த நிகழ்ச்சி தொடங்கியது. இதனை, முதல் சீசனில் இருந்து நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். 7வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் தேதி தொடங்கியது. எப்போதும், மக்களுக்கு ஓரளவிற்கு நன்கு தெரிந்த முகங்களை பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தேர்ந்தெடுத்தனர். ஆனால், இந்த சீசனில் பெரிய திரையில் மட்டுமன்றி சின்னத்திரை மற்றும் டிஜிட்டல் திரை முகங்களையும் தேர்ந்தெடுத்தனர். 


இந்த சீசனில், ஆரம்பத்தில் இருந்தே ட்விஸ்டிற்கு மேல் ட்விஸ்ட் வந்து கொண்டிருந்தது. ஒரே வீடாக இருந்த பிக்பாஸ் வீடு, இரண்டாக பிரிந்தது. டபுள் எவிக்ஷன், இரண்டு வைல்டு கார்டு என யாரும் எதிர்பாராத ட்விஸ்டுகளும் இப்போட்டியில் இருந்தது. இந்த நிலையில், இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்துள்ளது. 


இந்த வாரம் டபுள் எவிக்ஷன்..


கடந்த வாரம், பிக்பாஸ் நிகழ்ச்சியின் வார இறுதி எபிசோட் நடந்தது. அதில், போன வார கேப்டனாக இருந்த விஷ்ணுவை ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் போட்டு தாக்கினர். வீட்டில் பொழுதுபாேக்கில்லை, அனைவரும் வன்மத்தை கக்குகின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்ததது. இதனால் கமல்ஹாசன் கடந்த வாரம் அனைவரையும் வருத்தெடுத்தார். இந்த நிலையில், இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடைப்பெற்றது. 


மேலும் படிக்க | Nayanthara-Vignesh Shivan:இணையத்தை கலக்கும் நயன்-விக்கியின் க்யூட் புகைப்படங்கள்!


மிட்-வீக் எவிக்ஷன் என்ற பெயரில், இந்த வாரத்தின் நடுவிலேயே அனன்யா வெளியேற்றப்பட்டார். இவர், ஏற்கனவே பிக்பாஸ் போட்டியில் ஒரு வாரம் இருந்தார். பின்னர், 1 வாரத்தில் எவிக்ட் செய்யப்பட்டு மீண்டும் வைல்டு கார்டு மூலம் உள்நுழைந்தார். இவரையடுத்து, நடிகர் கூல் சுரேஷும் எவிக்ட் செய்யப்பட்டுள்ளார். 



தப்பிக்க முயன்ற கூல் சுரேஷ்…


நடிகர் கூல் சுரேஷ், பிக்பாஸ் போட்டியில் சர்ப்ரைஸான போட்டியாளராக உள்நுழைந்தார். ஆரம்பத்தில் கேம் புரியாமல் இருந்த இவர், அதன் பிறகு நன்றாகவே விளையாட ஆரம்பித்தார். கடந்த ஒரு வார காலமாக வீட்டிற்கு போக வேண்டும் என்றும், இங்கிருக்கவே பிடிக்கவில்லை என்றும் பேசினார். சில நாட்களுக்கு முன்பு, சுவர் ஏறி குதித்து பிக்பாஸ் வீட்டில் இருந்து தப்பிக்க முயன்றார். இதையடுத்து, அவரை பிக்பாஸ் அழைத்து சமாதானம் செய்தார். இந்த வாரம் கூல் சுரேஷ் எவிக்ட் ஆகியிருப்பதற்கும் இது காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. 


மீதமுள்ள போட்டியாளர்கள்..


70 நாட்களுக்கும் மேல் பிக்பாஸ் போட்டியில் இருப்பவர்கள் மாயா, பூர்ணிமா, சரவண விக்ரம், நிக்சன், விஷ்ணு, விசித்ரா, மாயா, மணிச்சந்திரா, ரவீணா உள்ளிட்டாேர் இருக்கின்றனர். இவர்களையடுத்து முதல் வைல்டு கார்டு மூலம் உள் நுழைந்த ஆர்.ஜே.அர்ச்சனா மற்றும் தினேஷ் ஆகியோர் உள்ளனர். இரண்டாவது வைல்டு கார்டில் உள்நுழைந்த விஜய், பிக்பாஸ் வீட்டில் உள்ளார். ரசிகர்களின் கருத்துகளின் படி, இப்போதைக்கு யாருமே பலமான போட்டியாளராக தெரியவில்லை என்று கூறப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்பிருந்து வரை, மக்களிடம் கெட்ட பெயர் வாங்கிய மாயா, சமீப காலமாக அனைவருக்கும் பிடித்த போட்டியாளராக உள்ளார். 


மேலும் படிக்க | சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் கிராண்ட் பைனல் நிகழ்ச்சியை நேரில் பார்க்க டிக்கெட் இலவசம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ