பிக்பாஸ் சீசன் 7: கடந்த சில மாதங்களாக, மக்கள் மத்தியில் ஹாட் டாப்பிக்காக இருப்பது, பிக்பாஸ் சீசன் 7 (Bigg Boss 7). இந்நிகழ்ச்சி, கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் தேதி தொடங்கப்பட்டது. ஆங்கிலத்தில் ‘பிக் பிரதர்’ என்று என்று தொடங்கப்பட்ட போட்டியை, அதே பெயரில் இந்தியில் 2007ஆம் ஆண்டு தாெடங்கினர். தென்னிந்திய மாெழிகளில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் இந்நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அந்தந்த மொழிகளில் இருக்கும் சூப்பர் ஸ்டார் நடிகர்கள்தான் தொகுத்து வழங்கி வருகின்றனர். தமிழில் 2017ஆம் ஆண்டு தொடங்கிய இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் முதல் சீசனில் இருந்து தொகுத்து வழங்கி வருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொகுப்பாளராக கமல்ஹாசன் வாங்கிய விமர்சனங்கள்..


நடிகர் கமல்ஹாசன், திரைத்துறையில் நடிகராக மட்டுமன்றி திரைக்கதையாசிரியராகவும் இயக்குநராகவும் பாடகராகவும் பன்முகங்களை சிறப்பாக காட்டி வருகிறார். பிக்பாஸ் முதல் சீசனில் அவர் தொகுத்து வழங்கி வந்த போது இவருக்கு பெரிதாக எந்த விமர்சனங்களும் எழவில்லை “என்னப்பா புரியாம பேசுகிறார்..” என்ற பொதுவான கருத்து மட்டுமே ரசிர்கள் மத்தியில் இருந்தது. கடந்த 6வது சீசனில் இவர் விக்ரமனுக்கு ஆதரவாக நின்றதாகவும் இதனால் அவர் பாரபட்சமான தொகுப்பாளராக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. 


பிக்பாஸ் சீசன் 7 போட்டியில், ஆரம்பத்தில் இருந்தே எந்த போட்டியாளரும் மக்களுக்கு பிடித்தவாறு இல்லை என்று கூறப்பட்டது. இந்த சீசனின் பலமான போட்டியாளராக கருதப்பட்டவர், பிரதீப் ஆண்டனி. இவரை மக்களுக்கு பிடித்திருந்தாலும், பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இவரை பிடிக்கவில்லை. அவர், தகாத வார்த்தைகளால் பிறரை திட்டுவதும் பெண்களை குறி வைத்து ஆபாச வார்த்தைகளால் பேசுவது போன்ற விஷயங்களை செய்து வந்தார். இதனால், சில பிக்பாஸ் பாேட்டியாளர்கள் உரிமை குரல் தூக்கி, ரெட் கார்டு கொடுத்து வெளியில் அனுப்பினர். பிரதீப் வெளியேறிய பிறகு, அவர் தனது நிலையை எடுத்துரைக்க, கமல் வாய்ப்பு தரவில்லை என்ற கருத்து எழுந்தது. பிரதீப்பை, தனது அரசியல் ஆதாயத்திற்காக உபயோகப்படுத்திக்கொண்டதாகவும் கூறப்பட்டது. மேலும், தனக்கு பிடித்தவர்களை கமல்ஹாசன் எதுவும் கூறுவதில்லை எனவும், நடுநிலையாக இருப்பதில்லை எனறவும் கூறப்பட்டது. 


மேலும் படிக்க | பிக்பாஸ் 7: இந்த வாரம் எவிக்ட் ஆவது இவர்தான்! எல்லாருக்கும் பிடிச்சவராச்சே..


இது மட்டுமன்றி, கமல்ஹாசன் வார இறுதியின் எபிசோடில் கொடுக்கும் அட்வைஸையும் பலர் பின்பற்றுவதில்லை என அவரே கூறியிருக்கிறார். இதனால், அவருக்கு பிக்பாஸ் போட்டியாளர்கள் மீது அதிருப்தி ஏற்பட்டது. 


பிக்பாஸை விட்டு வெளியேறும் கமல்? 


பிரதீப் விவகாரத்தை தொடர்ந்து, கமலுக்கும் பிக்பாஸ் குழுவினருக்கும் சரிபட்டு வரவில்லை என்று கூறப்படுகிறது. கமல், பிக்பாஸ் மேடையை தனது அரசியல் பிரசாரத்திற்காக உபயோகப்படுத்தி கொள்கிறார் என்றும் ரசிகர்கள் கருத்துகளை தெரிவிக்கின்றனர். வழக்கமாக பிக்பாஸ் பாேட்டியாளர்களை மீம்ஸ் போட்டு கலாய்க்கும் ரசிகர்கள், இந்த முறை கமலை கலாய்க்க ஆரம்பித்தனர். இவர் போட்டிருந்த ஆடையில் இருந்து, அவர் பேசிய விஷயங்கள் வரை அனைத்தும் மீம் மெட்டீரியலாக மாறியது. இந்த நிலையில், அவர் இனிவரும் சீசன்களில் தொடர மாட்டார் என கூறப்படுகிறது. இவருக்கு பதிலாக வேறு ஒரு பெரிய நடிகர் தொகுப்பாளராக களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. அவர் யார் தெரியுமா? 



அந்த நடிகர் யார்? 


ரசிகர்களால் ‘சுப்ரீம் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் சரத்குமார், கமல்ஹாசனுக்கு பதிலாக தொகுப்பாளராக களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. இவரது பெயரோடு சேர்ந்து, இன்னும் 2-3 நடிகர்களின் பெயரையும் பிக்பாஸ் டீம் கலந்தாலோசித்து வருவதாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | பிக்பாஸ் வீட்டில் 75 நாட்கள்.. கூல் சுரேஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ