பிக்பாஸ் போட்டியில் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர்: தமிழகத்தை தாண்டி இந்திய அளவில் பெரிய டாப்பிக்காக பேசப்பட்டு வரும் நிகழ்ச்சி, பிக்பாஸ். விறுவிறுப்பான திருப்பங்களுடன் நடைப்பெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் எவிக்ட் செய்யப்பட உள்ள போட்டியாளர் யார் என்பதை இந்த கட்டுரையில் தெரிந்துக்கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி:
ஆங்கிலத்தில் பிக் பிரதர் என்ற பெயரில் நடந்து வந்த நிகழ்ச்சியை, இந்தியாவில் பிக்பாஸ் நிகழ்ச்சியாக (Bigg Boss Tamil 7) மாற்றி ஒளிபரப்பு செய்து வருகின்றனர். முதலில் இந்தியில் தாெடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, தற்போது தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. அந்தந்த மொழிகளில் அந்தந்த திரையுலகினை சேர்ந்த பிரபல நடிகர்கள் நிகழ்ச்சியை தாெகுத்து வழங்கி வருகின்றனர். 


மேலும் படிக்க | ராணி போல் வாழும் ராஷ்மிகா.. மலைப் போல் குவியும் சொத்து, சம்பளம்


இந்நிலையில் தமிழ் மொழில், கடந்த 2017ஆம் ஆண்டு இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை, முதல் சீசனில் இருந்து நடிகர் கமல்ஹாசன் (Kamal Haasan) தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி, பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தாெடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரையுலகை சேர்ந்தவர்கள் மட்டுமன்றி டிஜிட்டல் முகங்களாக இருக்கும் சிலரும் களமிறங்கியுள்ளனர். தற்போது வரை 46வது நாள் பிக்பாஸ் நிகழ்ச்சி எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில், வலுவான போட்டியாளர்களாக கருதப்பட்ட சிலர் போட்டியை விட்டு வெளியேறியுள்ளனர். உள்ளிருக்கும் போட்டியாளர்களும் பெரிதாக மக்களுக்கு பிடித்த விஷயங்களை செய்வதில்லை. அப்படி பெரிதாக வெளியில் தெரியாத போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர். ஆனால் இந்த வாரம், எந்த போட்டியாளர் வெளியேறப் போகயுள்ளார் என்பது தொடர்பான செய்தி வெளியாகி யுள்ளது. அதன்படி இந்த வாரம் விசித்ரா, ரவீனா, மணிசந்திரா, பூர்ணிமா, ஆர்ஜே பிராவோ, கானா பாலா, அக்‌ஷயா, விக்ரம் உள்ளிட்ட போட்டியாளர்களின் ஒருவர் தான் வெளியேறயுள்ளார்.


இந்த வாரம் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் போட்டியாளர்:
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் வாரம் ஒருவர் வெளியேறுவது எல்லோரும் அறிந்ததே. இதில் நம் சினி உலகம் சார்பில் நடந்த கருத்துக்கணிப்பு ரிசல்ட் தற்போது வெளிவந்துள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் கானா பாலா அவர்கள் தான் மிக குறைந்த வாக்குகளை பெற்றுள்ளார், அவரை தொடர்ந்து அக்‌ஷயா (Akshaya), பூர்ணிமா (Poornima Ravi), ரவீனா (Raveena Daha), ஆர் ஜே ப்ரோவோ (RJ Bravo), மணிசந்திரா (Manichandra) அவர்கள் குறைந்த வாக்குகளில் இருக்க, விசித்ரா (Vichithra) அதிக வாக்குகளை பெற்று முதலிடத்தில் உள்ளார். அதன்படி கானா பாலா (Gana Bala) இந்த பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.



விக்ரமா? கானா பாலாவா?: 
இதனிடையே கானா பாலா மற்றும் விக்ரம் இருவரும் குறைவான ஓட்டுக்களை அன் அஃபிஷியல் கருத்துக் கணிப்பில் பெற்றுள்ள நிலையில், இந்த இருவரில் ஒருவர் தான் இந்த வாரம் வெளியேறப் போறது உறுதி என்று கூறப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | 18 வயதில் பல கோடிக்கு அதிபதி.. விக்ரமின் ரீல் மகள் சாராவின் சொத்து மதிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு, ஆன்மீகம், ஆயிலகம் என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ