Bigg Boss 7: பிக்பாஸ் வெற்றியாளர் இவர்தான்... லீக்கான தகவல்!
Bigg Boss 7 Title Winner: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் வெற்றியாளராக அர்ச்சனா தேர்வு செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
Bigg Boss 7 Title Winner: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் வெற்றியாளராக அர்ச்சனா தேர்வு செய்யப்பட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. சென்னை EVP பகுதியில் இன்று படப்பிடிப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதாவது, பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இறுதிநாள் (Bigg Boss 7 Finale) படப்பிடிப்பு இன்று நடைபெற்றதாகவும், அதில் கமல்ஹாசன் பங்கேற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் வெற்றியாளராக அர்ச்சனா (Archana) தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. அதிக வாக்குகளின் அடிப்படையில் அவர் வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், மணிசந்திரா இரண்டாவது பரிசையும், மாயா மூன்றாவது பரிசையும் வென்றிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. தினேஷ் மற்றும் விஷ்ணு ஆகியோர் வாக்குகள் குறைவாக பெற்றதால் முன்னரே எவிக்ட் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த சீசன் தொடங்கி 28ஆவது நாள் அன்று வைல்ட் கார்டு மூலம் அர்ச்சனா பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்தார். அந்த வகையில், வைல்ட் கார்டு மூலம் நுழைந்து டைட்டிலை வெல்லும் முதல் வெற்றியாளர் அர்ச்சனா ஆவார். தொகுப்பாளராகவும், நடிகையாகவும் பிரபலமான அர்ச்சனா தற்போது பிக்பாஸ் தொடர் மூலம் மேலும் புகழ் பெற்றுள்ளார்.
மேலும் படிக்க | கமல்-மாயா உறவு குறித்து ஓபனாக கலாய்த்த பிரபலங்கள்! வைரலாகும் வீடியா..
பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக். 1ஆம் தேதி முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. விஜய் வர்மா, விஷ்ணு விஜய், பாவா செல்லதுரை, விசித்ரா, சரவண விக்ரம் (பாண்டியன் ஸ்டோர்ஸ்), மாயா கிருஷ்ணன், மணி சந்திரா, ஐசு (நடனக் கலைஞர்), ஜோவிகா (வனிதா மகள்), அக்ஷயா உதயகுமார், கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, நிக்சன், அனன்யா எஸ் ராவ், விஷ்ணு தேவி, பூர்ணிமா ரவி, ரவீணா தாஹா, யுகேந்திரன் வாசுதேவன் ஆகியோர் முதல் நாள் அன்று பிக்பாஸ் வீட்டில் நுழைந்தார்.
அர்ச்சனா, தினேஷ், கானா பாலா, அன்னபாரதி, ஆர்ஜே பிராவோ ஆகியோர் 28ஆவது நாள் அன்று வைல்ட் கார்டு மூலம் வெளிவந்தது. அனன்யா, விஜய் வர்மா ஆகியோர் எவிக்டான பின்னர் 56ஆவது நாள் அன்று மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுத்தனர். இருப்பினும் அர்ச்சனா, தினேஷ், மணிசந்திரா, மாயா, தினேஷ் ஆகியோர் கடைசி Finale வரை வந்தனர்.
தற்போது அதிக வாக்குகள் வாங்கி அர்ச்சனா வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது ரூ.50 லட்சம் பரிசுத் தொகையை அர்ச்சனா பெறுவார் எனலாம். இதற்கு முன், ஆரவ், ரித்விகா, முகேன் ராவ், ராஜூ, ஆரி, அசீம் ஆகியோர் முறையே முதல் ஆறு சீசன்களின் டைட்டிலை வென்றனர்.
மேலும் படிக்க | ‘அயலான்’ ஏலியனுக்கு வாய்ஸ் கொடுக்க சித்தார்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ