கமல்-மாயா உறவு குறித்து ஓபனாக கலாய்த்த பிரபலங்கள்! வைரலாகும் வீடியா..

Bigg Boss 7 Tamil: பிக்பாஸ் போட்டியாளரான மாயாவையும் கமலையும் வைத்து பல வகையான மீம்ஸ் பரவி வருவதை அடுத்து, இவர்களை பொது வெளியில் இரண்டு பிரபலங்கள் ஓபனாக கலாய்த்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.   

Written by - Yuvashree | Last Updated : Jan 13, 2024, 05:15 PM IST
  • கமல்-மாயா விக்ரம் படத்தில் சேர்ந்து நடித்தனர்.
  • கமல்-மாயா குறித்த மீம்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
  • இது குறித்து இரண்டு பிரபலங்கள் மேடையில் பேசியுள்ளனர்.
கமல்-மாயா உறவு குறித்து ஓபனாக கலாய்த்த பிரபலங்கள்! வைரலாகும் வீடியா.. title=

பரபரப்பாக நடைப்பெற்று வந்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசனில் முக்கிய போட்டியாளராக இருப்பவர்களுள் ஒருவர் மாயா. துணை நடிகையான மாயா, பிக்பாஸில் நல்ல எண்டர்டெயினராகவும், சிறப்பான போட்டியாளராகவும் வலம் வந்தார். இவரையும், நடிகரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளருமான கமல்ஹாசனையும் வைத்து பல நாட்களாக மீம்ஸ்களும் வீடியாேக்களும் வைரலாகி வருகிறது. 

மாயா-கமல் மீம்ஸ்:

மாயா, பல தமிழ் படங்களில் துணை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம், விக்ரம். இந்த படத்தில் இவர் பாலியல் தொழிலாளியாக நடித்திருப்பார். இதில், இவர் கமல்ஹாசன் மற்றும் பகத் பாசிலுடன் சேர்ந்து நடித்திருப்பார். இதன் தொடர்ச்சியாக, லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் இன்னொரு படமாக கடந்த ஆண்டு வெளியான படம், லியோ. இந்த படத்திலும் மாயா கேமியோ ரோல் செய்திருப்பார். இது குறித்து நேர்காணலில் பேசிய லோகேஷ், விக்ரம் படத்தில் பாலியல் தொழிலாளியாக இருந்த மாயா, பின்னர் கமலின் குழுவால் காப்பாற்றப்பட்டு அவர்களுக்காக வேலை பார்க்கும் கதாப்பாத்திரம் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். அது மட்டுமன்றி, லியோ படத்தில் வில்லனாக வந்த சஞ்சய் தத்திற்கு தமிழ் சொல்லிக்கொடுத்ததே மாயாதான் என்றும் சமீபத்தில் தெரிய வந்தது. 

கமலும் மாயாவும் ஏற்கனவே ஒரு படத்தில் ஒன்றாக நடித்துள்ளதால், அவர் பிக்பாஸ் இல்லத்திற்குள் நுழைந்த போதே, கமல் இவரை எதற்கும் கேள்வி கேட்பதில்லை என்று ரசிகர்கள் மத்தியில் கருத்துகள் எழுந்தன. இவர்கள் வீக் எண்டில் பேசிக்கொள்வதையெல்லாம் தொகுத்து இவர்களுக்குள் என்னவோ காதல் உறவு உள்ளது போல பலர் மீம்ஸ்களை எடிட்களாக பதிவிட்டனர். 

மேலும் படிக்க | Vijay Varma: 2வது முறை எவிக்ட் ஆன விஜய் வர்மா! இதுவரை பிக்பாஸில் வாங்கிய சம்பளம் எவ்வளவு?

கமல்-மாயாவை மேடையில் கலாய்த்த பிரபலங்கள்..

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் சேனலில் உள்ள பிரபலங்கள் பலர் எப்போதும் மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது வழக்கம். அப்படி ஒரு நிகழ்ச்சியல் ‘குக் வித் கோமாளி’ புகழும், குரேஷியும் கலந்து கொண்டனர். அப்போது புகழ், இப்போது “இன்ஸ்டாகிராமில் பிரபலாக இருக்கும் நபரே இவர் ஒருவர் மட்டும்தான்” என்று கூறி கமலை கலாய்க்க ஆரம்பித்தார்.

குரேஷி, கமல் வாய்ஸில் பேச ஆரம்பித்தார். புகழ், “உங்களுக்கும் மாயாவுக்கும்..” என்று கேட்க அதற்கு கமல் வாய்ஸில் பேசிய குரேஷி, “ஒன்னும் இல்லை” என்று கூறினார். பிடித்த இடம் என்று கேட்டதற்கு, மாயாஜால் என்றும், பிடித்த படம் என்ன என்று கேட்டதற்கு மாயாபஜார் என்றும் தமிழில் பிடித்த இடம் என்று கேட்டதற்கு மாயவரம் என்றும் கூறினார். இவர்கள், மேடையில் இப்படி பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இறுதிப்போட்டிக்குள் நுழைந்த 5 போட்டியாளர்கள்..

பிக்பாஸ் 7 நிகழ்ச்சியின் இறுதிப்பாேட்டி, நாளை நடைபெற உள்ளது. இதில், விஜே அர்ச்சனா அதிக வாக்குகளை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மாயா, இவருக்கு அடுத்து நிறைய வாக்குகளை பெற்றுள்ளதாகவும், தினேஷ் மற்றும் மணி அடுத்தடுத்த இடங்களில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. 5 பேரில் முதலில் எவிக்ட் ஆகும் நபராக விஷ்ணு இருப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. 

மேலும் படிக்க | BB 7 Title Winner: பிக்பாஸ் டைட்டிலை தட்டித்தூக்கப்போவது யார்? கணிப்பு இதுதான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News