பிக்பாஸ் பிரபலம் ஐஸ்வர்யா தத்தா, பெயரிடப்படாத திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரபல தனியார் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த பிக்பாஸ் தமிழ் சீசன் II நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் மாதம் முடிவடைந்த நிலையில்., இப்போட்டியில் பங்கேற்ற போட்டியாளர்கள் வீட்டிற்கு வெளியில் வந்து புது திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகின்றனர்.


அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் அனைத்து போட்டியாளர்களாலும் தூற்றப்பட்ட நடிகை ஐஸ்வர்யா தத்தா தற்போது நடிகர் ஆரி நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். காதலை மையமாக கொண்டு உருவாகவுள்ள திரைப்படம் குறித்து LOVE Vs LOVE என படத்தின் நாயகன் ஆரி குறிப்பிட்டுள்ளார். எனவே படத்தின் திரைக்கதை எதிர்புகளை மீறு வெள்ளும் காதல் கதையாக இருக்கலாம் என தெரிகிறது.


ஐய்யனார் திரைப்படத்தினை இயக்கிய ராஜ மித்திரன் இத்திரைப்படத்தினை இயக்குகின்றார். ஒளிப்பதிவு தில்ராஜ் மேற்கொள்ள, மகேஷ் இசையமைக்கின்றார்.


இத்திரைப்படம் குறித்து படத்தின் நாயகன் ஆரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...