ஜோடியாக அறிமுகமாகும் அமீர் - பாவ்னி! இயக்குனர் யார் தெரியுமா?
![ஜோடியாக அறிமுகமாகும் அமீர் - பாவ்னி! இயக்குனர் யார் தெரியுமா? ஜோடியாக அறிமுகமாகும் அமீர் - பாவ்னி! இயக்குனர் யார் தெரியுமா?](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2023/04/10/283300-amirpavni.png?itok=vMhenl8r)
பிக் பாஸ் ஜோடியான அமீர் மற்றும் பாவ்னி ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தை அமீர் இயக்க உள்ளார்.
அமீர் மற்றும் பாவ்னி தமிழ் திரையுலகில் நன்கு அறியப்பட்ட பிரபல ஜோடியாக உள்ளனர். விஜய் டிவியில் 'பிக்பாஸ் தமிழ் சீசன் 5' கேம் ஷோவில் இருவரும் கலந்துகொண்டதைத் தொடர்ந்து இருவரும் காதலில் மலர்ந்தனர். இருவரும் அஜித் குமாரின் த்ரில்லர் படமான 'துணிவு' மூலம் பெரிய திரையில் அறிமுகமானார்கள்.
மேலும் படிக்க | விடுதலை பார்ட் 2-க்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்! வெளியாவதில் சந்தேகம்!
தற்போது, அமீரும் பாவ்னியும் ஒரு புதிய படத்தில் ஜோடி சேரப் போகிறார்கள் என்பது ஹாட் செய்தி வெளியாகி உள்ளது. நடன இயக்குனராகவும் இருக்கும் அமீர் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். இந்த படத்தை ஸ்ரீ நல்ல வீரப்பசாமி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்தப் படம் இன்று பூஜையுடன் படப்பிடிப்பு தொங்கப்பட்டது.
அமீர், பாவ்னி கலந்து கொண்ட படத்தின் பூஜை புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. பெயரிடப்படாத இப்படத்திற்கு ஷபீர் சுல்தா இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை முறையே செல்வா ஆர்கே மற்றும் பாலாஜி கே ராஜா ஆகியோர் கையாள்கின்றனர். மேலும் படத்தின் கூடுதல் விவரங்கள் மற்றும் நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | லெஜண்ட் சரவணனின் புதிய லுக்கை பார்த்தீர்களா? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ