ஜிபி முத்துக்கு அடித்த ஜாக்பாட்; மாஸ் ஹீரோ படத்தில் நடிக்க வாய்ப்பு
உச்ச நடிகர் படத்தில் ஜிபி முத்து நடிக்க இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த ஜிபி முத்து, டிக்டாக் மூலம் சமூக வலைதளங்களில் அடியெடுத்து வைத்து இன்று உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் கொண்டாடும் அளவுக்கு யூ டியூப்பில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் 3ஆவது வரைக்கும் தான் படித்து இருக்கிறார். இவரது நெல்லை பேச்சுக்கும், நையாண்டியாகப் பதிவேற்றும் வீடியோவிற்கும் என்று ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
சமீபத்தில் இவருக்கு பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்து இருந்தது. அத்துடன் ஒட்டுமொத்த பிக்பாஸ் ரசிகர்கள் கண்ணும் ஜிபி முத்து மீது தான் இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்து கலக்கி கொண்டு இருந்தார். இந்த சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களிலேயே அதிகமான ரசிகர்களை இவருக்கு தான் உண்டு. ஆனால், இவர் குடும்பத்தின் மீது இருந்த ஏக்கத்தின் காரணமாக தாமாகவே இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இது பலருக்குமே ஷாக்காக இருந்தது. அதன்படி பிக் பாஸ் வீட்டில் கிட்டத்தட்ட 14 நாட்கள் இருந்திருக்கிறார்.
மேலும் படிக்க | பிக்பாஸ் வீட்டில் ஜி.பி.முத்து வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
இதற்கிடையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு கோவையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் ஜி பி முத்து சன்னி லியோனுடன் இணைந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று இருந்தார்.
இந்த நிலையில் தற்போது ஒரு மாசான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது, அதன்படி அஜித் படத்தில் ஜிபி முத்து நடிக்க இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, ஜிபி முத்துவிற்கு அஜித் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்திருப்பதாகவும், அதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் ஜி பி முத்துவே கூறியிருக்கிறார்.
இதனை அவரே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள ஏகே 62 படத்தில் தான் ஜிபி முத்துவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். விரைவில் இதுகுறித்த குட் நியூஸ் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | சன்னிலியோனா அவங்க யாரு?... ஜிபி முத்து
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ