பிக்பாஸ் சீசன் 8 வெற்றியாளர் கண்டிப்பாக ஒரு பெண்தான்! ஏன் தெரியுமா?
Bigg Boss 8 Tamil Title Winner Prediction : பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன், சமீபத்தில் தொடங்கியது. ஆரம்பத்திலேயே சூடு பிடித்திருக்கும் இந்த ஆட்டத்தின் இறுதியில் கண்டிப்பாக ஒரு பெண் போட்டியாளர்தான் வெற்றி பெறுவார் என கூறப்படுகிறது. அது ஏன் தெரியுமா?
Bigg Boss 8 Tamil Title Winner Prediction : ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிகழ்ச்சி, பிக்பாஸ். 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, தற்போது 8வது சீசனை தொட்டிருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.
பிக்பாஸ் 8:
தமிழ் தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் பல இருப்பினும், ஒரு சில நிகழ்ச்சிகள் மட்டுமே பெரிய ஹிட் அடிக்கின்றன. அந்த வகையில், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு நிகழ்ச்சிதான், பிக்பாஸ். அனைத்து சீசன்களிலும் ஒவ்வொரு புதுமை கொண்டுவரப்படும் இந்த நிகழ்ச்சியில், கடந்த 7வது சீசன் வரை ஹோஸ்ட் ஆக இருந்த கமல்ஹாசன், இதற்கு மேல் தன்னால் இதில் தொடர முடியாது என்று கூறிவிட்டு, இந்நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டார். அவருக்கு பதிலாக புது ஆங்கராக வந்திருப்பவர் விஜய் சேதுபதி.
இந்த பிக்பாஸ் சீசன் ஆண்கள் vs பெண்கள் என பிரிக்கப்பட்டிருக்கிறது. வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு, அதில் ஆண்கள் ஒரு புறமும், பெண்கள் ஒரு புறமும் இருக்கின்றனர். இவர்களை வைத்துதான் தற்போது டாஸ்குகளும் நடைப்பெற்று வருகிறது. சுமார் 4 நாட்களுக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சிதான் என்றாலும், தற்போது இது பரபரப்பான கட்டங்களை எட்டி வருகிறது.
இதுவரை வெற்றி பெற்றவர்கள்..
பிக்பாஸ் 8 போட்டியை பொறுத்தவரை, அதில் யார் வெற்றி பெறுவார் என்பதை ஆரம்பத்திலேயே கூற முடியாது. முதலில் பலமான போட்டியாளர்களாக இருப்பவர்கள், பாதியிலேயே எலிமினேட் ஆகி விடுவர். பாதியில் வந்தவர்கள், டைட்டில் வின்னர்களாக மாறுவர். அந்த வகையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை வென்றவர்களை இங்கு பார்ப்பாேம்.
சீசன் 1-ஆரவ்
சீசன் 2-ரித்விகா
சீசன் 3-முகேன் ராவ்
சீசன் 4-ஆரி அர்ஜுன்
சீசன் 5-ராஜு
சீசன் 6-அஸீம்
சீசன் 7-அர்ச்சனா ரவிச்சந்திரன்
மேலும் படிக்க | பிக்பாஸ் 8: 2வதாக எவிக்ட் ஆகும் போட்டியாளர் யார்? டேஞ்சர் லிஸ்டில் ‘இவர்’!
இந்த முறை பெண் போட்டியாளர்தான் வின்னரா?
பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் இந்த முறை 9 ஆண்கள் மற்றும் 9 ஆண்கள் போட்டியாளர்களாக களமிறங்கினர். இதில், இப்பாேது வரை யார் வலுவான போட்டியாளராக இருக்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால், ஒரு சிலர் கொஞ்சம் பதுங்கி, தந்திரமாக விளையாடி வருகின்றனர். பிக்பாஸ் இல்லத்தில் விறுவிறுப்பாக போட்டிகளும் டாஸ்குகள் ஒரு புறம் நடந்து வர, வெளியே நெட்டிசன்கள் போட்டியாளர்கள் குறித்து பேச ஆரம்பித்து விட்டனர்.
இணையத்தில் பலர், இந்த முறை கண்டிப்பாக ஒரு பெண் போட்டியாளர்தான் வெற்றியாளராக இருப்பார் என்று கூறி வருகின்றனர். இதற்கு காரணம் என்ன தெரியுமா?
காரணம்..
பிக்பாஸ் 8 நிகழ்ச்சியின் விதிமுறைகளின் படி, தற்போதைக்கு வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு ஒரு பாதியில் ஆண்களும் ஒரு பாதியில் பெண்களும் இருக்கின்றனர். தற்போதைக்கு, பிக்பாஸ் இல்லத்தில் ஆண்கள்தான் அதிக ரூல்ஸ்களை வைப்பதாக கூறப்படுகிறது. இதே நிலைதான், கடந்த சீசனிலும் நடந்தது. ஆனால் அப்போது அர்ச்சனா ஒற்றை ஆளாக நின்று கப்பை அசால்டாக வென்று விட்டார். அதே போல, இந்த சீசனிலும் டைட்டில் வின்னர் ஆவப்போவது ஒரு பெண்தான் என கூறப்படுகிறது. நெட்டிசன்களின் கணிப்பு பொய்யாகிறதா, மெய்யாகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க | பிக்பாஸ் 8: முதல் நாளிலேயே வெளியேறும் பெண் பாேட்டியாளர்! யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ