Bigg Boss Tamil Season 5: தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் (Bigg Boss Tamil) நிகழ்ச்சியின் நான்கு சீசன்கள் நிறைவடைந்து விட்டது. நான்காவது சீசனின் இறுதிப் போட்டி ஜனவரி மாதம் தான் நடத்தி முடிக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிக் பாஸ் நிகழ்ச்சியின் (Bigg Boss Tamil) 4 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் (Kamalhaasan) தொகுத்து வழங்கினார். நான்காவது சீசன் முடியும் போதே, ஐந்தாவது சீசன் ஜுன் - ஜுலை மாதத்தில் துவக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி திட்டமிட்டது போல்தொடங்கப்படவில்லை. 


ALSO READ | Bigg Boss Tamil Season 5 Latest Updates: பிக்பாஸ் இல் சூப்பர் சிங்கர் பிரியங்கா


இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 5 பற்றிய முறையான அறிவிப்புக்கள் வர துவங்கின. சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 5 (Bigg Boss Tamil) நிகழ்ச்சியின் இரண்டு புரொமோகள் வெளியாகி இணையத்தில் வைரலானது. 


இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதன்படி இந்த பட்டியலில் குக் வித் கோமாளி பிரபலங்கள் கனி, சுனிதா, ஜி.பி.முத்து, ஷகீலாவின் மகள் மிளா, துள்ளுவதோ இளமை அபினவ், வடிவுக்கரசி, ஐஸ்வர்யா, 90 மஎம்எல் படத்தில் நடித்த மசூம் ஷங்கர், சுசன் ஜார்ஜ் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.


இந்நிலையில் ஒவ்வொரு பிக் பாஸ் சீசனின் போதும், தனது பெயர் அடிபடுவதாக, நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அவர், “பிக்பாஸ் போட்டியாளர் பட்டியலில், ஒவ்வொரு சீசனிலும் எனது பெயரை பார்க்கிறேன். நான் பிக் பாஸ் தமிழ் 5-ம் சீசனில் இல்லை. பட்டியலில் இருந்து என் பெயரை நீக்கவும்” எனத் தெரிவித்துள்ளார்.


 



 


இதையடுத்து பிக் பாஸ் 5-ல் லட்சுமி ராமகிருஷ்ணன் இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது.


ALSO READ | Bigg Boss Tamil Season 5: இரண்டாவது புரொமோ வீடியோ வெளியானது; கசிந்தது முக்கிய தகவல்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR