Bigg Boss Tamil Season 5 promo: பிக் பாஸ் சீசன் 5 எப்போது தொடங்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் நேற்று உலக நாயகன் கமல்ஹாசன் இடம்பெற்றுள்ள பிக் பாஸ் சீசன் 5 புரொமோ வெளியாகி உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் (Bigg Boss Tamil) நிகழ்ச்சியின் 4 சீசன்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் (Kamalhaasan) தொகுத்து வழங்கினார். கொரோனா பெருந்தொற்று காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி எப்போது நடக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அப்போது நடக்கும் இப்போது நடக்கும் என்று சமூக ஊடகங்களில் பலரும் ஊகங்களை கொடுத்துக் கொண்டிருந்தனர். 


ALSO READ | இவருக்கு ஜோடியாகும் ஷிவாணி; வெளியான Proof போட்டோ


இந்நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி செப்டம்பரில் ஒளிபரப்பாகும் என்று செய்திகள் வெளியானது. இந்த சீசனையும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். அதே போல, பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் யார் என்ற தகவல்கள் சமூக ஊடகங்களில் சுற்றில் இருந்து கொண்டே இருக்கிறது. அதன் விவரத்தை இங்கே காண்போம். ஜி.பி முத்து, ரம்யா கிருஷ்ணன், ‘மைனா’ நந்தினி, ‘மைனா’ சூசன், வடிவுக்கரசி, ரமேஷ் கண்ணா, நடிகை ஷகிலாவின் மகள் மியா, லட்சுமி ராமகிருஷ்ணன் என பலருடைய பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், பிக் பாஸ் சீசன் 5 தொடங்கும்போது தான் யார் யார் போட்டியாளர்கள் என்ற உறுதியான தகவல் வெளியாகும். 


இதற்கிடையில் நேற்று பிக் பாஸ் சீசன் 5 புரொமோ மாலை 5.55 மணிக்கு வெளியானது.  இந்த புரொமோவில் கோட் ஷூட்டில் இருக்கும் கமல்ஹாசன் தனது கண்களை உருட்டி மிரட்டி, ஒரு வில்லத்தனமான சிரிப்புடன் ஆரம்பிக்கலாமா என்று பிக் பாஸ் சீசன் 5 லோகோவை அறிமுகம் செய்துள்ளார். மேலும் பிக் பாஸ் சீசன் 5 விரைவில் என்று தெரிவித்து புரோமோ விடியோ நிறைவடைகிறது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | Anitha Sampath Divorce: கணவரை விவாகரத்து செய்கிறாரா அனிதா சம்பத்; உண்மை என்ன


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR