இன்று வெளியாகியிருக்கும் பிக் பாஸ் புரோமோவில், பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் புதிய நபர் யார்? என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் (Bigg Boss) நிகழ்ச்சி 51வது நாளை எட்டியுள்ளது. விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் புதிய டாஸ்குகளை கொடுத்து வரும் பிக்பாஸ், போட்டியாளர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் புதுபுது சர்பிரைஸ்களையும் அவ்வப்போது கொடுத்து வருகிறார். அந்தவகையில், ஏற்கனவே போட்டியாளராக வந்து எலிமினேட் செய்யப்பட்ட அபிஷேக், யாரும் எதிர்பார்க்காத வகையில் வைல்டு கார்டு என்ட்ரியாக வீட்டிற்குள் வந்துள்ளார்.


அவரது வருகை மிகவும் சர்பிரைஸாக வைக்கப்பட்டிருந்தது. வைல்டு கார்டு என்டிரி இருக்கும் என பலரும் எதிர்பார்த்திருந்தாலும், அதில் அபிஷேக் வருவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. கடந்த வாரம் போட்டியாளர்களுக்கு ஆக்டிவிட்டி ஏரியாவில் வித்தியாசமான டாஸ்க் ஒன்றை பிக்பாஸ் கொடுத்தார். பாக்ஸ்கள் வைக்கப்பட்ட அந்த அறையில், இரண்டு தாயக்கட்டைகளை உருட்டி அதில் வரும் எண்ணிற்கேற்ப பாக்ஸ்களை திறக்குமாறு அறிவுறுத்தினார். 


அதன்படி, போட்டியாளர்களும் தாயக்கட்டைகளை உருட்டி, எந்த எண் வருகிறதோ, அந்த எண் பாக்ஸை திறந்தனர். ஒவ்வொரு பாக்ஸிலும் சாக்லெட், பிரியாணி உள்ளிட்ட ஐட்டங்கள் இருந்தன.


ALSO READ: கமலுக்கு கொரோனா தொற்று; பிக்பாஸ் நிலை என்ன


திடீரென, ஒரு பாக்ஸைத் திறக்கும்போது அதில் இருந்து அபிஷேக் படுவேகமாக எழுந்து அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். பிரியங்கா, இமான் அண்ணாச்சி ஆகியோர் வியப்பின் உச்சத்துக்ககே சென்றுவிட்டனர். பின்னர், அபிஷேக் வைல்டு கார்டு என்ட்ரி என தெரிந்து கொண்டனர். 


இதன்மூலம் ஒரு வைல்டு கார்டு என்ட்ரியை உறுதிப்படுத்திய பிக்பாஸ், மற்றொரு வைல்டு கார்டு என்டிரியை சஸ்பென்ஸாக வைத்துள்ளார். விஜய்யின் (Actor Vijay) நண்பர் மற்றும் சின்னத்திரை நடிகரான சஞ்சீவ், மா.க.பா ஆனந்த் உள்ளிட்டோர் வைல்டு கார்டு என்டிரியாக இருப்பார்கள் என யூகங்கள் இணையத்தில் பரவி வருகிறது. ஆனால், அவர்களின் யூகங்களை பொய்யாக்கும் வகையில், இன்று வெளியாகியிருக்கும் புரோமோவில் பிக்பாஸ் வீட்டிற்குள் புதிய நபர் ஒருவர் இருக்கிறார். அவர் யாரென யாருக்கும் தெரியவில்லை.


3 புரோமோக்களிலும் அவருடைய முகம் சிறு நொடி வந்து செல்கிறது. இதனை கச்சிதமாக பிடித்துக் கொண்ட நெட்டிசன்கள்,  ‘தம்பி நீ யாருப்பா நீ?’ என புலம்பி வருகின்றனர். ஒருவேளை அவர் புது வைல்டு கார்டு என்டிரியாக இருக்குமோ? என வினவி விருகின்றனர். பிக்பாஸில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் அந்த புதுமுகம் குறித்த டீட்டெய்ல்ஸ் இன்றைய நிகழ்ச்சியில் இருக்கும் என்பதால், இரவு 10 மணியை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


ALSO READ: பிக் பாஸ் தமிழ் 5: "புத்திசாலினு சொல்லி தள்ளாதிங்க" அண்ணாச்சியுடன் மோதும் அபிஷேக்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR