கொரோனா காலத்தில் மக்கள் தங்கள் மனதை சற்று லேசாக்கிக்கொள்ள ஒரு கருவியாக Bigg Boss Tamil-ன் நான்காவது சீசன் இருந்து வருகிறது என்று கூறலாம். தினமும் போட்டியாளர்களின் வெவ்வேறு பரிமாணங்களைப் பார்த்து நாம் நமது இறுக்கங்களையும் நமது பிரச்சனைகளையும் சிறிது நேரம் மறந்துதான் போகிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், பிக் பாசின் இந்த சீசனின் முதல் Wild Card Entry யாராக இருக்கும் என்ற கேள்வி பரவலாக இருந்து வந்த நிலையில், முதல் வைல்டு கார்ட் எண்ட்ரியாக அர்ச்சனா சந்தோக் (Archana Chandhoke) வீட்டிற்குள் சென்று விட்டார் என்ற செய்திகள் வந்துள்ளன.   


பிரபல வி.ஜே-வும் நடிகையுமான அர்ச்சனா சந்தோக் (Archana Chandhoke) ஏற்கனவே பிக் பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக வீட்டிற்கு சென்று விட்டார்.  அர்ச்சனா வீட்டிற்குள் வரும் எபிசோட் இன்று (அக்டோபர் 15) ஒளிபரப்பாகிறது.


ஆனால், அவர் வீட்டிற்குள் நுழைந்தவுடனேயே வீட்டில் எதோ பிரச்சனை ஏற்பட்டதாகத் தெரிகிறது. அர்ச்சனா போன்ற மிகப்பிரபலமான டிவி ஆளுமை வீட்டிற்குள் வந்திருப்பதால், Bigg Boss வீட்டில் ஏற்கனவே இருக்கும் பிக் பாஸ் போட்டியாளர்களும் (Bigg Boss Contestants) சற்று அரண்டுபோயுள்ளதாக எமது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


அர்ச்சனா வீட்டிற்குள் நுழைந்தவுடனேயே, அவர் சுரேஷ் சக்ரவர்த்தி குறித்து கருத்துகளைத் தெரிவிக்கத் தொடங்குகிறார்.


ALSO READ: ‘நிறம் தாண்டி நிஜம் பார்ப்போம்’: Bigg Boss வீட்டில் நிலவாய் ஜொலிக்கும் நிஷா!!


இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும் சேனல் வெளியிட்ட சமீபத்திய விளம்பர வீடியோவில், அர்ச்சனா மற்ற ஹவுஸ்மேட்களிடம், அவர்களில் சுரேஷ் சமைத்த உணவு யாருக்குப் பிடிக்கவில்லை என்று கேட்கிறார். அதற்கு பதிலாக அவர் தானே கையை உயர்த்துகிறார். சுரேஷ் தயாரிக்கும் உணவு தனக்கு மிகவும் பிடிக்கும் என்று ரியோ ராஜ் கூறுகிறார்.


அர்ச்சனா சில ஜோக்குகளையும் கூறுகிறார். திடீரென்று, அவர் சுரேஷின் அருகில் சென்று சுரேஷிடமிருந்து எதிர்மறை சக்தியை அகற்றுவது போல் செயல்படுகிறார். சுரேஷ் ஒரு தொகுப்பாளராக இருந்திருக்க வேண்டும் என்று அர்ச்சனா மேலும் கூறுகிறார். தான் ஒரு தொகுப்பாளராக இருந்ததாக பதிலளிக்கும் சுரேஷ் அங்கிருந்து சென்று விடுகிறார்.


Bigg Boss Tamil-ன் நான்காவது சீசனில் இப்போதுதான் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு பழகத் தொடங்கியுள்ளனர். பலரது உண்மை முகங்களும் இப்போதுதான் வெளியில் தென்படத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் Wild Card Entry-யாக வந்திருக்கும் அர்ச்சனா இவர்களது சங்கமத்தில் ஐக்கியமாகி விடுவாரா? கலகம் மூட்டி விடுவாரா? அல்லது காணாமல் போய் விடுவாரா?


பொறுத்திருந்து பார்க்கலாம்…..


ALSO READ: "800" படத்தின் Motion Poster வெளியானது: முத்தையா முரளிதரனாக மாறிய விஜய்சேதுபதி!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR