இந்த குறிப்பிட்ட யோகாசனங்கள் உங்கள் உடல் எடையை ஆரோக்கிய முறையில் குறைத்து எடையைச் சமநிலையில் வைக்க உதவுகிறது. யோகாசனங்கள் தினமும் காலையில் செய்வது உங்கள் உடலுக்குச் சிறந்த ஆரோக்கிய பயிற்சியாகும். இந்த யோகாசனங்கள் அனைத்தும் முறையான பயிற்சியாளர்களிடம் ஆலோசனைப்பெற்று அதன்படி நீங்கள் யோகாசனத்தை மேற்கொள்ளலாம்.
உடல் எடையைக் குறைக்க இந்த 8 யோகாசனங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் இந்த குளிர்காலத்தில் உங்கள் உடல் எடையை எளிமையாகக் குறைக்கலாம். இது உங்களுக்கான அறிய வாய்ப்பு என்றே சொல்லலாம். என்னதான் எவ்வளவு உடற்பயிற்சி மேற்கொண்டாலும் மற்றும் முறையான டயட் இருந்தாலும் உடல் எடை அப்படியே இருக்கிறது என்ற வருத்தம் இனி உங்களுக்குத் தேவையில்லை.
தனுராசனம்: இந்த யோகாசனம் உங்கள் அடி வயிற்று உறுப்புகளை நீட்டச் செய்து உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து மற்றும் வயிற்று இடுப்பு கொழுப்பைக் குறைக்கச் செய்கிறது.
புதஞ்சசானம்:இது யோகாசனம் உடலில் ஏற்படும் சோர்வை நீக்கும் மற்றும் சீரான ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. தொப்பை குறைப்பைக் கரைக்கவும் உதவுகிறது
சேதுபந்தாசனம்: இந்த யோகாசனம் உடலில் சீரான ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் கெட்ட கொழுப்பை எரிக்கச் செய்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
மலாசனாம்: இந்த யோகாசனம் மிகவும் எடை இழப்புக்கு உதவியாக இருக்கும் மேலும் கெட்ட கொழுப்பைக் கரைத்து உடலை ஆரோக்கியமாக்குகிறது.
திரிக்கோணாசனம்: இது வயிற்றுப் பகுதிகளுக்குக் கவனம் செலுத்தி கலோரிகளை எரிக்கச் செய்து உடல் எடையைக் குறைக்கிறது.
வீரபத்திராசனம்: இந்த யோகாசனம் உங்கள் கை மற்றும் கால்களின் தசைகளை வலிமையாக்குகிறது மேலும் இது எடையைக் குறைக்கச் செய்கிறது.
பச்சிமோத்தனாசனம்: இந்த யோகாசனம் மன அழுத்தத்தைக் குறைக்கச் செய்து உடல் உடல் எடையைக் குறைக்க ஊக்குவிக்கிறது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)