பிக்பாஸ் தமிழ் 5 சீசன்களைக் கடந்து 6வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது. அமுதவாணன், ராபர்ட் மாஸ்டர், ஜிபி முத்து உள்ளிட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஆரம்பமே அதிரடியாக டாஸ்குகளை கொடுத்து, வீட்டில் பரபரப்பாக வைத்திருக்கும் பிக்பாஸ் நாள்தோறும் புதுபுது கேம்களை கொடுத்து போட்டியாளர்களை திக்குமுக்காட வைத்து வருகிறார். இதனால், பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் வழக்கமாக ஒளிபரப்பப்படும் கடந்து வந்த பாதை டாஸ்கை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு முழுமையாக போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தப்படும் சொல்லாமல் சொல்லிவிட்டார் பிக்பாஸ்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எப்போது பிக்பாஸ் தொடங்கினாலும் பழைய வீடியோக்களின் கிளிப்பிங் வைரலாவது வழக்கம். அந்தவகையில் முதல் சீசனில் ஜூலி மற்றும் ஓவியா இடையே நடைபெற்ற சண்டை தொடர்பான குறும்படம் வீடியோ இப்போது வைரலாகியிருக்கிறது. குறும்படம் என்ற வார்த்தைக்கு டிரெண்ட் செட்டிங் செய்த அந்த வீடியோவை இப்போது பார்த்தும் ரசித்துக் கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள். ஜூலி - ஓவியா உரையாடலுக்கும், அதற்கு கமல் கொடுத்த ரியாக்ஷனும் தான் ஹைலைட். 


மேலும் படிக்க | பிக்பாஸ் வீட்டிற்கு மைனா நந்தினி செல்லாதது ஏன்? விஜய் டிவி வைத்திருக்கும் சர்பிரைஸ் இதுதான்


வீட்டில் இருக்கும் நமீதா, காயத்திரி ஆகியோர் ஓவியாவுக்கு எதிராக இருக்க, அந்த நேரத்தில் அவர்களுடன் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருந்த ஜூலி, ஓவியாவுடன் படுக்கையில் அமர்ந்து தன்னுடைய சொந்த கதை, சோக கதையெல்லாம் ஒப்பிக்கிறார். அதற்கு ஓவியா ஆறுதல் சொல்ல, இதனை பார்த்த நமீதா மற்றும் காயத்திரி ஆகியோர் ஜூலியை கேள்வி கேட்கின்றனர். இவர்களுடன் ஏற்கனவே இருக்கும் நட்பு வட்டம் கெட்டுப்போகக்கூடாது என்பதற்காக ஓவியா சொல்லாததையெல்லாம் சொன்னதாக திரித்து கூறிவிடுகிறார் ஓவியா.



இதனால் பிக்பாஸ் வீட்டில் பெரிய பூகம்பமே ஏற்பட்டு, ஓவியா தனிமைப்படுத்தப்படுகிறார். சோஷியல் மீடியாக்களில் ஓவியாவுக்கு ஆர்மி உருவாகி பெரிய போர்க்களம்போல் விவாதிக்கவும் தொடங்கிவிட்டனர். இதனை சமாளிக்க கமல் கையில் எடுத்த விஷயம் தான் குறும்படம். அதனை போட்டுக் காட்டி வீட்டில் இருப்பவர்களுக்கு தெளிவு ஏற்படுத்தியதுடன், சமூக ஊடங்களில் வெளியான விமர்சனங்களுக்கும் முற்றுப் புள்ளி வைத்தார். அந்த வீடியோவை இப்போது பகிர்ந்து பெஸ்ட் குறும்படம் வீடியோ என லைக்குகளை பறக்கவிட்டு வருகின்றனர் ரசிகர்கள். 


மேலும் படிக்க | ’அலப்பறை ஆரம்பம்’ பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் பிரியங்கா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ