பிக்பாஸ் வீட்டிற்கு மைனா நந்தினி செல்லாதது ஏன்? விஜய் டிவி வைத்திருக்கும் சர்பிரைஸ் இதுதான்

பிக்பாஸ் சீசன் 6 தமிழ் அறிமுக நிகழ்ச்சியில் மைனா நந்தினி கலந்து கொள்ளாதது குறித்த பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 9, 2022, 07:28 AM IST
  • பிரம்மாண்டமாக தொடங்கிய பிக்பாஸ்
  • ஜிபி முத்து உள்ளிட்டோர் பங்கேற்பு
  • மைனா நந்தினி கலந்து கொள்ளாதது ஏன்?
பிக்பாஸ் வீட்டிற்கு மைனா நந்தினி செல்லாதது ஏன்? விஜய் டிவி வைத்திருக்கும் சர்பிரைஸ் இதுதான் title=

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி பிரம்மாண்டமாக தொடங்கிவிட்டது. ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் பிக்பாஸ் 6 நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. தொடக்க விழா ஷூட்டிங் எப்போதும் போல் இந்த முறையும் கிராண்டாக நடைபெற்று இருக்கிறது. அதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்கே இருக்கும் உரிய ஸ்டைலுடன் மேடையில் தோன்றினர். அவர்களை தொகுப்பாளர் கமல்ஹாசன், தனக்கே உரிய பாணியில் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்துள்ளார்.

யாரெல்லாம் பங்கேற்கிறார்கள் என்ற பிக்பாஸ் போட்டியாளர்களின் லிஸ்ட் குறித்து ஆர்வமாக எதிர்நோக்கி இருந்த ரசிகர்களுக்கு இன்னும் சில மணி நேரங்களில் அதிகாரப்பூர்வமாக தொலைக்காட்சிகளிலேயே பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றாலும், கன்பார்ம் லிஸ்ட் முன்கூட்டியே வெளியாகியிருக்கிறது. அதன்படி, யூடியூப் மற்றும் டிக்டாக் ஷார்ட்ஸ் வீடியோ தளங்களில் பிரபலமாக இருக்கும் ஜி.பி முத்து முதல் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். அவரைத் தொடர்ந்து நடிகர் அஸிம், விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் காமெடியில் கலக்கிய அமுதவாணன், ராபர்ட் மாஸ்டர், இசைக்கலைஞர் அசல் கொலார், ரக்ஷிதா உள்ளிட்டோர் சென்றுள்ளனர். 

மேலும் படிக்க | ’புதுசுக்கு புதுசு’ பிக்பாஸ் 6 வீட்டின் பிரம்மிக்க வைக்கும் சொகுசு வசதிகள்

ஆனால், பிக்பாஸ் வீட்டிற்குள் செல்கிறார் என கடந்த சில வாரங்களாக கூறப்பட்ட மைனா நந்தினி பிக்பாஸ் சீசன் 6 அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. அவர் கலந்து கொள்ளாதது ஏன்? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. வழக்கமாக பிக்பாஸ் தொடங்கிய பிறகு ஆட்டத்தை ஆரம்பிக்கும் பிக்பாஸ், இந்த முறை ஆரம்பத்திலேயே தொடங்கியிருக்கிறாராம். அதாவது, அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத மைனா நந்தினி சர்பிரைஸ் என்ட்ரியாக வீட்டிற்குள் செல்ல வாய்ப்பு இருக்கிறதாம். முதல் நாள் நிகழ்ச்சி முடிந்த பிறகு மைனா நந்தினி என்ட்ரி குறித்த சீக்ரெட் வெளியாகுமாம். 

மேலும் படிக்க | Bigg Boss போட்டியாளர்கள் இவர்கள் தான்! ஒரே வீட்டில் குடியிருக்கப் போகும் பிரபலங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News