விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் வருண் மற்றும் அக்ஷரா ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். வீட்டில் இருக்கும்போதே நல்ல நண்பர்களாக இருந்த இருவரும், நிகழ்ச்சிக்குப் பிறகும் தங்களின் நட்பை தொடர்ந்து வருகின்றனர். பொது நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களில் ஜோடியாக நடிக்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ‘விக்ரம்’ படத்துக்கு வந்த புதிய சிக்கல்- படம் வெளியாகுமா?!


அண்மையில் அவர்கள் இருவரும் நடத்திய போட்டோஷூட் தான் இப்போது கவனத்தைப் பெற்றுள்ளது. திருமண உடை அலங்காரத்துக்காக இருவரும் மாப்பிள்ளை மற்றும் மணமகள்போல் உடையணிந்து அழகாக போஸ் கொடுத்துள்ளனர். இந்தப் புகைப்படம் இவர்களின் திருமணத்துக்காக எடுக்கப்பட்ட புகைப்படம்போல் இருக்கிறது. இதனைப் பார்த்துதான் பலரும் அக்ஷரா மற்றும் வருண் ஆகியோர் திருமணத்துக்கு தயாராகிவிட்டதாக புரளியை கிளப்பிவிட்டுள்ளனர். ஆனால், விளம்பர நிகழ்ச்சிகாக இருவரும் மாடல்களாக நடித்துள்ளனர். 



வருண், தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவன உரிமையாளர் ஐசரி கணேசனின் நெருங்கிய உறவினர். வனமகன் கோமாளி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் லீட் ரோலில் நடித்த படத்தை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார். வருண் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் அந்தப் படம் ரிலீஸானது. அக்ஷரா, பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பல்வேறு பேஷன் ஷோக்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். 


மேலும் படிக்க | அந்த 30 நிமிடம்... ‘டான்’ படம் பார்த்துக் கண்ணீர்விட்ட ரஜினிகாந்த்!


இந்த லேட்டஸ்ட் போட்டோஷூட்டை அக்ஷராவும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்துக்கு கமெண்ட் அடித்துள்ள நெட்டிசன்கள், இருவரின் ஜோடி பொருத்தமும் சூப்பராக இருப்பதாக கூறியுள்ளனர். சிலர், அவர்கள் காதலிப்பதாலேயே இப்படியான போட்டோஷூட்களை எடுப்பதாகவும் கொளுத்தி போட்டுள்ளனர். 



சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR