Biggest Controversies Of Tamil Cinema In 2024 : 2024-ல் பலருக்கும் அவர்களின் வாழ்வில் இன்ப அதிர்ச்சிகள் நடந்திருக்கும். அப்படி, கோலிவுட்டிலும் பல விஷயங்கள் நடந்தது. அதிலும், இங்கு நடந்த சர்ச்சைகள்தான் ஹைலைட்டாக பார்க்கப்பட்டது. அப்படி, மக்கள் மத்தியல் பரவலாக பேசப்பட்ட சர்ச்சைகள் குறித்து இங்கு பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

த்ரிஷாவை சுற்றிய சர்ச்சைகள்:


நடிகை த்ரிஷா, இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து தொடர்ந்து பல சர்ச்சைகளை சந்தித்து வந்தார். முதலில் மன்சூர் அலிகான், அவரை வைத்து ஒரு கற்பழிப்பு ஜோக்கை செய்தார். இது பெரும் பிரச்சனையாகி விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து, அதிமுக நிர்வாகி ஒருவர், கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்த போது, த்ரிஷாவை கூட்டி வந்து கூத்தடித்ததாக கூறினார். இது பெரும் சர்ச்சையாக மாறியது. இந்த நிலையில், இது காவல் நிலையம், புகார் என பெரிய பிரச்சனையாக மாறியது. அதன் பிறகு சம்பந்தப்பட்ட அந்த நபரே மன்னிப்பு கேட்டுவிட்டார். 



விஜய்யுடனான கிசுகிசு:


நடிகர் விஜய்யும் த்ரிஷாவும் கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து, ஒன்றாக லியோ படத்தில் நடித்தனர். இந்த படத்தில் இருவருக்கும் இடையிலான முத்தக்காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இது ரசிகர்கள் மத்தியில் நெருடல்களை ஏற்படுத்தியது. இதையடுத்து, விஜய்யும் த்ரிஷாவும் அவர் நடித்த கோட் படத்தில் மட்ட பாடலுக்கு நடனமாடினர். யாருக்காகவும் ஐடம் டான்ஸ் ஆட மாட்டேன் எனக்கூறிய த்ரிஷா, முதன்முறையாக விஜய்க்கான நடனமாடியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதே போல விஜய் சங்கீதாவுடன் இல்லை என்றும், த்ரிஷாவுடன் அவ்வப்போது வெக்கேஷன் செல்வதாகவும் கூறப்படுகிறது. இப்படி,  இந்த ஆண்டில் சர்ச்சைகளினால் வைரலான நாயகியாக இருக்கிறார் த்ரிஷா. 


நயன்தாரா-தனுஷ் சர்ச்சை:


நடிகை நயன்தாராவும் தனுஷும் ஒரு காலத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். ஆனால், இருவரும் தற்போது எதிரிகளை விட மாேசமாக சண்டை போட்டனர். நானும் ரெளடிதான் படத்தின் காட்சிகளை நயன்தாராவின் ஆவணப்படத்தில் பயன்படுத்தக்கூடாது என தனுஷ் நோட்டீஸ் அனுப்பி, அதற்கு நஷ்ட ஈடாக 10 கோடி ரூபாயையும் கொடுக்க வேண்டும் என்று கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை மீறி, நயன்தாரா அந்த காட்சிகளை தனது படத்தில உபயோகித்ததால் அவர் மீது தனுஷ் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இதனால், இவர்களுக்குள் நீதிப்போர் நிலவி வருகிறது. 


நண்பர்களாக இருந்த இருவரும், சண்டையிட்ட பிறகு ஒரே திருமணத்தில் கலந்து கொள்ளும் நிலை ஏற்பட்டது. அப்போது இருவருமே ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்க்காமல் திரும்பி விட்டனர். இதுதான் இந்த ஆண்டிலும், இவர்களின் சர்ச்சையிலும் ஹைலைட்டாக பார்க்கப்பட்டது. 



மேலும் படிக்க | நயன்தாராவுடன் சண்டை..பிரச்சனைக்கு பின் தனுஷ் நக்கலாக போட்ட முதல் பதிவு!!


ஏ.ஆர்.ரஹ்மானின் விவாகரத்து:


இசையுலகின் ஜாம்பவானாக விளங்கி வரும் ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் பிரிய இருப்பதாக அறிவித்தனர். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த இவர்கள் இப்படி பிரிவது ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்குழுவில் இருக்கும் ஒரு பெண்ணும் தனது கணவரை பிரிவதாக அறிவித்தார். இதனால் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் அவப்பெயராக மாற ஆரம்பித்தது. இதற்கு அவரது மனைவியே விளக்கம் அளித்தார். இதைனால் மன உளைச்சளுக்கு ஆளான ஏ.ஆர்.ரஹ்மான், ஒரு வருடம் திரையுலகில் இருந்து பிரேக் எடுப்பதாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | ஏ.ஆர்.ரஹ்மானை பிரிய காரணம் இதுதான்! சாய்ரா பானு வெளியிட்ட பரபரப்பு ஆடியோ..


காப்புரிமை கேட்ட இளையராஜா:


இந்த வருடம் இளையராஜாவின் பெயர் டேமேஜ் ஆனதற்கு காரணம், காப்புரிமை பிரச்சனை. தனது பாடலை உபயோகித்த படங்கள் மீதெல்லாம் வழக்கு தொடுத்த இவர், ரஜினியின் கூலி படத்தையும் விட்டுவைக்கவில்லை. இந்த படத்தின் டைட்டில் டீசரில் பயன்படுத்தப்பட்டிருந்த தனது பாடலுக்கு காப்புரிமை கேட்டார். இதையடுத்து அந்த பிரச்சனையை அவர்களுக்குள்ளேயே பேசி சமாதானம் செய்து கொண்டனர். 


கங்குவா சர்ச்சை:


கங்குவா திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களுள் ஒன்று. இந்த படம், இந்த ஆண்டின் பெரும் தோல்வி அடைந்த படமாகும். இந்த படம் தோல்வி அடைந்ததற்கு, அதற்கு வந்த விமர்சனங்களும் ஒரு பெரிய காரணம். இதையடுத்து, தன் கணவருக்கும் கங்குவா படக்குழுவிற்கும் ஆதரவாக பதிவிட்ட ஜோதிகா, தங்களின் படத்தை வேண்டுமென்றே சிலர் அட்டாக் செய்வதாக கூறினார். இது அவருக்கே வினையாக மாறி, அவர் மீதே ரசிகர்கள் ட்ரோல் மழையை பொழிந்தனர். 



தென்னிந்திய திரையுலகில் ஏற்பட்ட சர்ச்சைகள்:


புஷ்பா 2 திரைப்படத்தின் ப்ரீமியர் ஷோவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் ஒரு பெண்ணும் அவரது 9வயது மகனும் உயிரிழந்தனர். இதற்கு காரணம் நடிகர் அல்லு  அர்ஜுன் அந்த திரையரங்கிற்கு வந்ததுதான் என புகார் அளிக்கப்பட்டு அவர் சிறைக்கு சென்று திரும்பினார். இருப்பினும், இந்த பிரச்சனை இன்னும் ஓய்ந்தபாடில்லை. ஒரு சாரார் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவு தெரிவிக்க, இன்னொரு பக்கம் சிலர் அவருக்கு எதிராக குரலெழுப்பி வருகின்றனர். 


ஜனி மாஸ்டருக்கு திருச்சிற்றம்பலம் படத்திற்காக சிறந்த நடன இயக்குநர் தேசிய விருது வழங்கப்பட இருந்தது. ஆனால், அவர் மீது பாலியல் புகார் எழுந்ததால் அந்த விருது அவருக்கு வழங்கப்படவில்லை. 


மேலும் படிக்க | 2024-ல் தோல்வி படங்களை கொடுத்த டாப் 10 ஹீரோக்கள்! நம்பர் 1 இடத்தில் யார்?


மேலும் படிக்க | த்ரிஷா இதுவரை சந்தித்த சர்ச்சைகள்! அதுக்குன்னு இவ்வளவா...


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ