வாய்ப்பு கேட்டவரை உதாசீனப்படுத்திய சிவகார்த்திகேயன்! என்ன செய்தார் தெரியுமா?
நடிகர் சிவகார்த்திகேயன், தன்னிடம் வாய்ப்பு கேட்டு வந்த ஒரு துணை நடிகரை உதாசீசனப்படுத்தியதாக அந்த நடிகர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர், சிவகார்த்திகேயன். பிரபல தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளராக இருந்த சிவா, கடந்த 10 ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வரும் இவர், தற்போது டாப் ஹீரோக்களுள் ஒருவராக உள்ளார்.
தாெகுப்பாளராக இருந்து ஹீரோவான சிவகார்த்திகேயன்:
நடிகர் சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக இருந்த போது தனது பேச்சுத்திறமையால் பலரை கவர்ந்துள்ளார். இதுவே அவருக்கு பெரிய திரையில் வாய்ப்பு கிடைக்கவும் காரணமாக இருந்தது. ஆரம்பத்தில் துணை நடிகராக இருந்த சிவா, தற்போது அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக உள்ளார். இவரை போலவே, இவருடன் கோ-ஆங்கராக இருந்தவர்களும், போட்டியாளர்களாக இருந்தவர்களும் இவரை பின்தொடர்ந்து சினிாவிற்குள் வந்தனர். ஆனால் அவர்களில் பலரால் காமெடியை தாண்டி, ஹீரோவாக மாற முடியவில்லை.
மேலும் படிக்க | Viduthalai: விடுதலை படத்தின் முதல் பாகத்திற்கு மீண்டும் சர்வதேச அங்கீகாரம்!
சிவாவிடம் வாய்ப்பு கேட்ட துணை நடிகர்..
90ஸ் குழந்தைகளிடையே மிகவும் பிரபலமான சின்னத்திரை தொடர், கணா காணும் காலங்கள். இந்த தொடரில், முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தவர், பிளாக் பாண்டி. இந்த தொடரின் மூலம் இவருக்கு பெரிய ரீச் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, இவருக்கு சில படங்களில் காமெடி கதாப்பாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அங்காடி தெரு, பாகன், கோலி சோடா, சாட்டை, வேலாயுதம் உள்ளிட்ட சில படங்களில் காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தார். இவர், நடிகராக மட்டுமன்றி மக்களுக்கு பொது சேவை செய்யும் பிரபலமாகவும் உள்ளார். இவர், ‘உதவும் மனிதம்’ எனும் அமைப்பின் மூலமாக பலருக்கு விளம்பரமின்றி உதவி செய்து வருகிறார். தற்போது பெரிதாக பட வாய்ப்புகள் இவருக்கு கிடைப்பதில்லை என கூறப்படுகிறது. இதனால் இவர் அடிக்கடி பிரபல யூடியூப் சேனல்களுக்கு நேர்காணல் கொடுத்து வருகிறார். அப்படி ஒரு பேட்டியில் தான் சிவகார்த்திகேயனிடம் ஒரு முறை வாய்ப்பு கேட்டதாக கூறியுள்ளார்.
உதாசீனப்படுத்திய சிவகார்த்திகேயன்?
பட வாய்ப்புகள் இல்லாத போது, ஒரு முறை சிவகார்த்திகேயனை அணுகியதாக கூறியுள்ளார் பிளாக் பாண்டி. அப்போது அவரிடம் தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும் பட வாய்ப்பு ஏதேனும் இருந்தால் தருமாறும் கேட்டுளார். அதன் பிறகு சிவகார்த்திகேயனின் மேனஜர் தன்னிடம் வந்து ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்தாராம். அந்த தொகையை அவரிடமே திருப்பி கொடுத்த பிளாக் பாண்டி, நடிக்க ஏதேனும் வாய்ப்பு கொடுங்கள், காசு வேண்டாம் என கூறியுள்ளார். ஆனால் அதன் பிறகு சிவகார்த்திகேயனிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், தற்போது சிவகார்த்திகேயனுடன் எந்த வித தொடர்பும் தனக்கு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கெட்ட பெயர்..
நடிகர் சிவகார்த்திகேயன், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இமானின் விவாகரத்து விவகாரத்தில் சிக்கினார். இதனால் இவரது பெயர் பெரிதாக மக்களிடையே டேமேஜ் ஆனது. இந்த சமயத்தில் துணை நடிகரான பிளாக் பாண்டியும் இது போல கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அவர் தொடர்ந்து கெட்டப்பெயர் வாங்கி வருவதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
மேலும் படிக்க | Sai Pallavi: களைக்கட்டிய சாய்பல்லவி தங்கையின் நிச்சயதார்த்தம்! வைரல் புகைப்படங்கள்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ