கோடிகளில் புரளும் சிவகார்த்திகேயன்...’மாவீரன்’ படக்குழுவின் சம்பள விவரம்..!

Maaveeran Salary Details: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள மாவீரன் படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல விமர்சனம் கிடைத்துள்ள நிலையில், அப்படக்குழுவின் சம்பள விவரம் வெளியாகி வைரலாகி வருகிறது.   

Written by - Yuvashree | Last Updated : Jul 16, 2023, 12:26 PM IST
  • ‘மாவீரன்’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
  • படக்குழுவின் சம்பள விவரம் வெளியாகியுள்ளது.
  • சிவகார்த்திகேயனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?
கோடிகளில் புரளும் சிவகார்த்திகேயன்...’மாவீரன்’ படக்குழுவின் சம்பள விவரம்..! title=

மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம், மாவீரன். இந்த படம் நேற்று முன்தினம் (ஜூலை 14) வெளியான நிலையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்களில் வெற்றி நடைப்போட்டு வருகிறது. 

ஃபேண்டசி-ஆக்ஷன் திரைப்படம்:

மண்டேலா பட இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கியுள்ள படம், மாவீரன், இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார். சரிதா, மிஷ்கின், குக் வித் கோமாளியில் வந்த மோனிஷா என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஃபேண்டசி கதையாக உருவாகியுள்ள இப்படம், சிவகார்த்திகேயனுக்கு மிகவும் புதிது. அதிகம் காமெடி-கொஞ்சம் செண்டிமன்ட் நிறைந்த படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், இந்த படத்தில் கொஞ்சம் காமெடி-நிறைய ஆக்ஷன் காட்சிகளில் நடித்திருக்கிறார். 

வசூல்:

‘மாவீரன்’ திரைப்படம் தமிழ்நாடு மட்டுமின்றி தெலங்கான,  ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் வெளியாகியுள்ளது. தமிழில் மாவீரன் என்ற பெயரிலும் தெலுங்கில் மஹாவீரடு என்ற பெயரிலும் இப்படம் வெளியாகியுள்ளது. இப்படம், ரிலீஸான அனைத்து இடங்களிலும் வசூல் மழையை குவித்து வருகிறது. படத்தின் முதல் நாள் கலக்ஷன் மட்டுமே 8 முதல் 10 கோடி ரூபாய் வரை இருக்கும் என திரை வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதில், தமிழ்நாட்டில் மட்டும் 6 முதல் 8 கோடி ரூபாய் வரை மாவீரன் படம் வசூல் செய்திருக்கும் என்றும் வெளிநாடுகளில் 1 முதல் 2  கோடி ரூபாய் வரை வசூல் செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | Viral Video: லூசுப்பெண்ணே பாடலுக்கு ரசிகர் கூட்டத்துடன் சேர்ந்து ‘வைப்’ செய்த சிம்பு..!

சம்பள விவரம்:

சிவகார்த்திகேயன் முதல் மிஷ்கின் வரை ‘மாவீரன்’ படத்தில் நடிகர்கள் வாங்கியுள்ள சம்பள விவரம், இதோ.

மோனிஷா ப்ளெஸ்ஸி:

சின்னத்திரையுலகில் சமீப காலமாக ஆட்சி செய்து வருபவர், மோனிஷா ப்ளெஸ்ஸி. இவர், பிரபல டிவி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் பங்கேற்பாளராக வருகிறார். இவருக்கு மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை ‘கப்’பென்று பிடித்துக்கொண்ட இவர், இந்த படத்தில் நடிக்க 10 லட்ச ரூபாய் வாங்கியிருப்பதாக பேசப்படுகிறது. 

சரிதா:

தமிழ் சினிமாவின் அப்போதைய முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் சரிதா. பல வருடங்கள் சினிமாவிற்கு ப்ரேக் விட்ட இவர், மாவீரன் படம் மூலம் கம்-பேக் கொடுத்தார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக நடித்திருந்தார். படம் முழுக்க ட்ராவல் ஆகும் கதாப்பாத்திரங்களுல் இவரும் ஒருவர். இந்த படத்தில் நடிக்க இவருக்கு 30 லட்ச ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

யோகி பாபு:

தமிழ் சினிமாவில் துணை கதாப்பாத்திரங்களில் நடித்து இன்று நகைச்சுவை நாயகனாக உயர்ந்திருப்பவர் யோகி பாபு. இவரும் மாவீரன் படத்தில் முக்கியமாக கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். இதில் நடிப்பதற்காக அவர், 30 லட்ச ரூபாய் சம்பளமாக வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. 

மிஷ்கின்:

இயக்குநராக இருந்து நடிகராக அவதாரம் எடுத்தவர் மிஷ்கின். குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த இவர், தற்போது வில்லனாகவும் நடிக்க ஆரம்பித்துள்ளார். மாவீரன் படம்தான் இவரது வில்லன் கதாப்பாத்தரத்திற்கு அடித்தளமாக அமைந்துள்ளது. இந்த படத்தில் அவர், கோபக்கார அரசியல்வாதியாக அடித்துள்ளார். இந்த கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்காக அவர் 35 லட்ச ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 

சுனில்:

தெலுங்கு சினிமாவில் நகைச்சுவை நடிகராக கோலோச்சியுள்ளவர் சுனில். இவர் தற்போது குணச்சித்திர கதாப்பாத்திரங்கிளும் கலக்கி வருகிறார். மாவீரன் கதாப்பாத்திரத்திலும் இதே போன்ற ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக இவர் 35 லட்ச ரூபாய் வாங்கியிருக்கிறாராம். 

அதிதி ஷங்கர்:

பிரபல இயக்குநர் ஷங்கரின் செல்ல மகள் அதிதி சங்கர் மாவீரன் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். விருமன் படத்தில் அறிமுகமான இவர், மாவீரன் படத்தில் நடிப்பதற்காக 50 லட்ச ரூபாயை சம்பளமாக வாங்கியுள்ளாராம். 

சிவகார்த்திகேயன்:

சின்னத்திரையில் பலரையும் தனது சிரிப்பான பேச்சால் மயக்கிய சிவகார்த்திகேயன் இன்று அழகான ஹீரோவாக திரையில் தோன்றி பலரையும வியக்க வைத்துள்ளார். இவருக்குத்தான் இந்த படத்தில் கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் 30 கோடி ரூபாய் சம்பளம் வாங்க இருந்தாராம். பின்னர் அதில் 5 கோடியை குறைத்துக்கொண்டு 25 கோடி ரூபாயை சம்பளமாக வாங்கியுள்ளாராம். 

மேலும் படிக்க |  அதுக்குள்ள இத்தனை கோடி வசூலா..! ‘மாவீரன்’ படத்தின் முதல் நாள் கலக்ஷன்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News