புதுடெல்லி: பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் கடந்த 1998-ம் ஆண்டு, ‘ஹம் சாத் சாத் ஹெய்ன்’ என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் சென்றிருந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது அவர் தடை செய்யப்பட்டுள்ள அபூர்வ இன கருப்பு மானை வேட்டையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவருடன் படப்பிடிப்புக்கு சென்றிருந்த நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு, நீலம், நடிகர் சைப் அலி கான் உள்ளிட்டவர்களும் இந்த வழக்கில் சிக்கினர்.


இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், சல்மான் கானுக்கு ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை விதித்து.


கடந்த 2007-ம் ஆண்டு சல்மான் கான் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த ஜோத்பூர் மாவட்ட விரைவு நீதிமன்றம் நடிகர் சல்மான்கானின் 5 ஆண்டு கால சிறை தண்டனையை உறுதி செய்தது. 6 நாட்கள் சிறைவாசம் அனுபவிக்க நேரிட்டது. பின்னர், சிறையில் இருந்து அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.


இந்நிலையில், இதுதொடர்பான வழக்கில் இன்று நேரில் ஆஜராகும்படி ஜோத்பூர் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் சல்மான் கான் உள்ளிட்டவர்களுக்கு முன்னர் உத்தரவிட்டிருந்தது.


இந்நிலையில், சல்மான் கான் உள்பட இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவரும் இன்று காலை 11.30 மணியளவில் ஜோத்பூர் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட் முன்னர் ஆஜராகினர்.


சல்மான் கான் சார்பில் ஆஜரான வக்கீல், இந்த மான் வேட்டை சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் நேரத்தில் எனது கட்சிக்காரர் படப்பிடிப்பில் நடித்து விட்டு ஓட்டல் அறையில் தங்கியிருந்தார். அவர்மீது வேண்டுமென்றே பொய்யாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.