DD Returns Santhanam Salary: நடிகர் சந்தானம் தொலைக்காட்சியில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, திரைத்துறையிலும் தனக்கென தனி நகைச்சுவை பாணியை உருவாக்கி அதில் முத்திரை பதித்தவர். லொல்லு சபா காலம் முதல் கடைசியாக வெளிவந்த ஏஜென்ட் கண்ணாயிரம் வரை சந்தானம் அவரின் தனித்துவத்தை மட்டும் விடவேயில்லை. தற்போது நகைச்சுவை நடிகர் என்பதை தாண்டி கதை நாயகனாக கடந்த சில ஆண்டுகளாக பல படங்களை நடித்து வருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, A1, பாரிஸ் ஜெயராஜ் என ஓரிரு படங்களே அவருக்கு கைக்கொடுத்தன. மற்ற அனைத்தும் அவருக்கு சுமாரான வரவேற்பையே பெற்று தந்தது எனலாம். இருப்பினும், தொடர்ந்து கதைக்கும், நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுத்து வந்த சந்தானத்திற்கு தற்போது 'DD Returns' படம் மூலம் நல்ல பலன் கிடைத்திருப்பதாக தெரிகிறது. அவர் நாயகனாக நடித்துள்ள DD Returns திரைப்படம் கடந்த ஜூலை 28ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.


மேலும் படிக்க | லியோ படத்தில் நான் இருக்கேனா? அர்ஜுன் தாஸ் சொன்ன பதில்!


விறுவிறுப்பான திரைக்கதை


DD Returns படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் இருக்கும் ஏராளமான ஒன்-லைனர்கள் பார்வையாளர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்ததாக சமூக வலைதளங்களில் பலரும் தெரிவித்து வருகின்றனர். முதல் பாதி 40 நிமிடம் மற்றும் இரண்டாம் பாதி 85 நிமிடம் என மொத்த படமே 2 மணிநேரம் 5 நிமிடங்கள் தான். எனவே, விறுவிறுப்பான திரைக்கதையால் படம் இந்த மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதாகவும் விமர்சகர்கள்  தெரிவிக்கின்றனர். 


மூன்று நாள் வசூல்


அதுமிட்டுமின்றி, சந்தானம் காமெடியில் பெரிய குற்றச்சாட்டாக வைக்கப்படும் பாடி-ஷேம்மிங் காமெடிகள் இதில் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டுள்ளன. அது குறித்த புரிதலுக்கு சந்தானம் வந்தடைந்துள்ளார் என்பது படத்திலேயே நமக்கு தெரிகிறது. ஒரளவுக்கு குறைந்த பட்ஜெட்டில் படம் தயாராகியிருப்பதாக கூறப்படும் நிலையில், படம் வெளியாகி மூன்று நாள் வசூலே நல்ல அளவில் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 


சந்தானத்தின் சம்பளம்


அதாவது, 12 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், சுமார் 400 திரையரங்குகளில் திரைப்படம் வெளியானதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், உலகளவில் DD Returns திரைப்படம் முதல் நாளில் 2.6 கோடி ரூபாயும், இரண்டாம் நாளில் 2.95 கோடியும், ஞாயிற்றுக்கிழமையான நேற்று (மூன்றாம் நாள்) 4 கோடி ரூபாயும் என மொத்தம் 9.55 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. தொடர்ந்து, இந்த படத்தில் சந்தானத்தின் சம்பளம் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்காக அவர் ரூ. 5 கோடி பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


LGM திரைப்படம்


தொடர்ந்து படங்கள் சறுக்கினாலும், தனக்கு இருக்கும் மார்க்கெட்டை சந்தானம் தக்கவைத்துள்ளார் எனவும் அடுத்தடுத்து வெளியாகும் படங்களுக்கு கூடுதல் நன்மையை அளிக்கும் எனவும் சினிமா வட்டாரங்களில் பேச்சுகள் அடிபடுகின்றன. கிரிக்கெட் வீரர் தோனியின் தயாரிப்பில் வெளிவந்த LGM படமும் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், அத்திரைப்படத்தை DD Returns வசூல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  


மேலும் படிக்க | டைனோசர் கால உயிரினத்தை கண்டுபிடித்த இந்தியர்.. புகழ்ந்து தள்ளிய டைட்டானிக் பட ஹீரோ!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ