திரையரங்கில் தாக்கப்பட்டாரா ப்ளூ சட்டை மாறன்? உண்மை என்ன?
திரைப்பட விமர்சனம் ப்ளூ சட்டை மாறன் திரையரங்கில் தாக்கப்படத்தகாக செய்திகள் வெளியானது.
தமிழ் சினிமாவில் பிரபல திரைப்பட விமர்சகராக இருப்பவர் ப்ளூ சட்டை மாறன். இவர் படங்களை விமர்சனம் செய்யும் விதம் மக்களிடையே பிரபலமானதாக உள்ளது. இவரது விமர்சனத்தை பார்க்க ரசிகர்களும் ஆவலோடு இருப்பர். ப்ளூ சட்டை மாறன் ஒரு படத்திற்கு நல்ல விமர்சனம் கொடுப்பது மிகவும் அரிது. எந்த ஹீரோ நடித்த படமாக இருந்தாலும், கழுவி ஊற்றி விடுவார். அந்த வகையில் சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தையும் நன்றாக இல்லை என்று விமர்சனம் செய்து இருந்தார்.
மேலும் படிக்க | ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ள ஆண்ட்ரியா – மிரட்டல் லுக்
வலிமை படத்தை பற்றிய விமர்சனத்தில் அஜித்தை உருவ கேலியும் செய்து இருந்தார். இதில் கடுப்பான அஜித் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை இணையத்தில் திட்ட ஆரம்பித்தனர். அவர் சமீபத்தில் இயக்கிய ஆன்டி இன்டியன் படத்தை வைத்து பதிலுக்கு விமர்சனம் செய்தனர் அஜித் ரசிகர்கள். ப்ளூ சட்டை மாறனும் விடாமல், அஜித்தை தாக்குவது போல பல பதிவுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த பிரச்சனை வலிமை படம் வெளியானதில் இருந்து தொடர்ந்து நடைபெற்று கொண்டிருந்தது.
இந்நிலையில் நேற்று முதல் ப்ளூ சட்டை மாறனை யாரோ திரையரங்கில் வைத்து அடித்து விட்டனர் என்று செய்தி வெளியானது. அவர் திரையரங்கில் இருப்பது போன்று புகைப்படங்களும் வெளியானது. தற்போது இது முற்றிலும் பொய்யான தகவல் என்று ப்ளூ சட்டை மாறன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், " தியேட்டர்னா நாலு பேர் பாக்க வருவாங்க. முடிஞ்சதும் வெளிய போவாங்க. அதை மறைஞ்சி நின்னு ஏன்டா போட்டோ எடுத்த? நேர்ல வந்து எடுத்து தொலைய வேண்டியதுதான? இதை ஷேர் பண்ணுற அளவுக்கு நான் செலப்ரிட்டி இல்ல. எப்படியோ...வைரல் பப்ளிசிட்டி தந்த அந்த தம்பிக்கு ரொம்ப நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | எஸ்.கேவுக்கு வில்லனாக மாறிய பிரேம்ஜி! - என்னாச்சு?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR