எஸ்.கேவுக்கு வில்லனாக மாறிய பிரேம்ஜி! - என்னாச்சு?

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் நடிகர் பிரேம்ஜி வில்லனாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Written by - ஜெ.வி.பிரவீன்குமார் | Last Updated : Mar 17, 2022, 02:25 PM IST
  • சிவகார்த்திகேயன் -20 படம் குறித்து புதிய தகவல்
  • சிவகார்த்திகேயனுடன் நடிகர் சத்யராஜ் நடிக்கிறார்
  • தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் படம் ரிலீஸ்

Trending Photos

எஸ்.கேவுக்கு வில்லனாக மாறிய பிரேம்ஜி! - என்னாச்சு? title=

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் நடிகர் பிரேம்ஜி வில்லனாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் படம் வரும் மே 13ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. அவர் நடித்துள்ள மற்றொரு படமான அயலான் படத்துக்கு போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதனிடையே ஜதிரத்னலு எனும் படத்தை இயக்கிய இயக்குநர் அனுதீப் கே.வி இயக்கும் புதிய படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமானார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. அண்மையில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. காரைக்குடி, பாண்டிச்சேரி மற்றும் லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் இதற்கான படப்பிடிப்புகள் நடைபெறவுள்ளன. இதில் நடிகர் சத்யராஜும் நடிக்கவுள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் உருவான சிவகார்த்திகேயன் - சத்யராஜ் கூட்டணி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் அக்கூட்டணி இப்படத்திலும் தொடர்கிறது.

இப்படம் வாயிலாக சிவகார்த்திகேயனின் படத்துக்கு முதன்முறையாக தமன் இசையமைக்கவுள்ளார். வெளிநாட்டு நடிகை உள்பட இரண்டு கதாநாயகிகள் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளனர்.இந்நிலையில், சிவகார்த்திகேயனின் இப்படத்தில் நடிகர் பிரேம்ஜியும் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிம்பு நடிப்பில் அண்மையில் வெளியாகி கவனம் பெற்ற மாநாடு படத்தையொட்டி சிவகார்த்திகேயன் அப்படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அப்போது சிவகார்த்திகேயன்- பிரேம்ஜி இடையேயான ஜாலியான ட்விட்டர் உரையாடல் இணையத்தில் வைரல் ஆனது. இந்த நிலையில்தான் சிவகார்த்திகேயனின் படத்திலேயே தற்போது  பிரேம்ஜி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.<

/p>

 

மேலும் படிக்க | சிவகார்த்திகேயனை ஃபாலோ செய்யும் ரஜினி?!

தனது அண்ணன் வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் தவறாமல் இடம்பெற்றுவிடும் பிரேம்ஜி, காமெடி மற்றும் சப்போர்டிங் ரோல்களில் மட்டுமே இதுவரை நடித்துவந்தார். இந்த நிலையில் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக பிரேம்ஜி நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. திரையில் தோன்றினாலே பார்வையாளர்களுக்கு சிரிப்பை வரவழைக்கும் உடல் மொழியைக் கொண்ட பிரேம்ஜி வில்லனாக எப்படி நடிக்கப் போகிறார் எனும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.

மேலும் படிக்க | சதங்களின் நாயகன் சச்சின்: 100 சதமடித்து 10 ஆண்டு நிறைவு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News