யூடியூப்பில் தமிழ் திரைபடங்களை சரமாரியாக விமர்சித்து வந்த புளூ சட்டை மாறன் இயக்கிய ஆன்டி இண்டியன் என்ற படத்தில் நடிகர் ரஜினி மற்றும் குறிப்பிட்ட மத அமைப்பை விமர்சித்து இழிவான காட்சிகள் இடம் பெற்றதால் படத்திற்கு தணிக்கை குழுவினர் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரபல இயக்குனர்கள் மற்றும் முன்னணி நடிகர்களின் படங்கள் என்றும் பாராமல் கடுமையாக விமர்சிப்பவர் புளூ சட்டை (Blue Sattai Maran) மாறன். இவர் மாறனை நம்பி ஆதம் பாவா என்பவர் ஒன்றரை கோடி முதலீட்டில் ஆண்டி இண்டியன் என்ற பெயரில் திரைப்படம் ஒன்றை எடுத்தார். இந்த படப்பிடிப்பு முழுமையடைந்து படமும் தயாரானது படத்தை சென்சாருக்கும் அனுப்பினர். இத்திரைப்படத்தை ஏப்ரல் 5-ம் தேதி, 2021 அன்று சென்சார் குழுவினர் பார்த்தனர்.


ஆட்சேபகரமான வசனங்கள் அல்லது காட்சிகள் இருந்தால், அவற்றை மாற்றவோ அல்லது நீக்கவோ சொல்வது சென்சார் குழுவினரின் (Censor Board) வழக்கம். ஆனால் 'ஆன்டி இண்டியன்' (Anti Indian) படத்தை முழுமையாக நிராகரித்து தடை செய்துள்ளனர். சர்ச்சையை ஏற்படுத்திய அனுராக் கஷ்யப்பின் உட்தா பஞ்சாப், தீபிகா படுகோனின் பத்மாவதி போன்ற படங்களுக்கும் இதுபோன்ற நிலை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | இறுதிச் சுற்று பட நாயகியின் #MeToo படத்திற்கு CBFC தடை....


மதம் சார்ந்த சமகாலப் பிரச்சினைகளையும், அரசியலையும் மையப்படுத்தி அழுத்தமாகவும், நையாண்டி பாணியிலும் எடுக்கப்பட்ட இப்படத்தைப் பார்த்த திரையுலக பிரபலங்கள் பலர் பாராட்டி இருந்தனர். ஆனால், அதற்கு தணிக்கை அதிகாரிகள் தடை விதித்திருப்பது படக்குழுவினரைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


இந்தத் தடை குறித்து தயாரிப்பாளர் ஆதம் பாவா, சென்சார் அதிகாரிகள் அவர்களுடைய முடிவைச் சொல்லியிருக்கிறார்கள். நாங்கள் மறுதணிக்கைக்கு மேல்முறையீடு செய்யவுள்ளோம். விரைவில் அனைத்துத் தடைகளும் நீங்கி ஆன்டி இண்டியன்' படம் வெளியாகும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR