மும்பை: ‘ஹாரிபாட்டர் அட் ஹோம்’ முயற்சியில் இணைந்த ஆலியா பட், ஜே.கே.ரவுலிங் புத்தகத்தின் 8 ஆம் அத்தியாயத்தை படிக்கும் ஒரு வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாலிவுட் நடிகர் ஆலியா பட் வியாழக்கிழமை, ‘ஹாரிபாட்டர் அட் ஹோம்’ முயற்சியுடன் இணைவதை அறிவித்தார். "ராஜி" படத்தின் நடிகை ஆலியா பட், தனது இன்ஸ்டாகிராமில், இந்த பிரபலமான ஜே.கே.ரவுலிங் புத்தகத்தின் 8-ஆம் அத்தியாயத்தை படிக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டார்.


"இரண்டு மாதங்களுக்கு முன்பு ஹாரி, ஹாக்வார்ட்ஸ் மற்றும் விஸாட்லிங் வேர்ல்ட் என் வாழ்க்கையில் நுழைந்தனர். இந்த கதையை நான் படிக்க தொடங்கினேன். இந்த கதை என் இதயத்தில் பதிந்து விட்டது. நான் குழந்தையாக இருந்தபோது, புத்தகங்களை விட்டு விலகியே இருந்தேன்" என்று ஆலியா இந்த வீடியோவின் தலைப்பில் குறிப்பிட்டுள்ளார்.


ஆனால் கடந்த  இரண்டு மாதங்களில், நான் இந்த புத்தகத்தை படிக்க தொடங்கினேன். மேலும் "ஹாரி பாட்டர் அட்ஹோம்" என்ற முயற்சியில் இணைந்ததாக ஆலியா குறிப்பிட்டார்.


க்ரிஃபிண்டோர் வீட்டின் மீதான தனது அன்பை "க்ரிஃபிண்டருக்கு 10 மில்லியன் புள்ளிகள்!" என குறிப்பிட்டார். ஹாக்வார்ட்ஸ் ஸ்கூல் ஆஃப் விட்ச்கிராஃப்ட் -ன் நான்கு வீடுகளில் க்ரிஃபிண்டோர் ஒன்றாகும். அதைச் சுற்றி கதை சுழல்கிறது.


சில நாட்களுக்கு முன், ஆலியா பட் "விரைவில் வருகிறேன்" என்ற தலைப்பில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அதில் ஆலியா பட் ஒரு புத்தகத்தை படிக்கும் புகைப்படம் காணப்பட்டது. மேலும் “உலக புத்தக தினத்தன்று” ஒரு புத்தகத்தின் படத்தை பகிர்து ஆலியா அதன் தலைப்பில் என் "புதிய நண்பர்" என்று எழுதியிருந்தார்.


 



ஆலியா பட்  தற்போது,  தன் காதலன் ரன்பீர் கபூருடன் வசித்து வருகிறார். மேலும் லாக்டவுன் முடிவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார் ஆலியா. லாக்டவுன் திறக்கப்பட்டவுடன் தனது புதிய அலுவலகத்தில் தனது பணிகளைத் தொடங்க ஆலியா மிகவும் உற்சாகமாக உள்ளதாக வெளிப்படுத்தினார். 


தனது அலுவலகத்தை அலங்கரிக்ககலை இயக்குனர் ரூபின் சுச்சக் உடன் இணைந்து தனதுஅலுவலகத்தின் இண்டீரியர் டெகரேஷனை செய்துள்ளார் ஆலியா. 2016 ஆம் ஆண்டில் வெளியான "டியர் ஜிந்தகி" திரைப்படத்தின் செட்டிங்கின் போது ஆலியா ரூபினுடன் நட்பு கொண்டார்.


"என் அலுவலகத்தை எவ்வாறு அலங்கரிக்க விரும்புகிறேன் என்பதைப் பற்றி  ரூபின் நன்றாகவே அறிந்துள்ளார். எனது இடத்தை வந்து பார்த்து அழகாக வடிவமைத்துள்ளார். இப்பொழுது அதிக இடம் இருப்பது போல் தெரிகிறது. இப்பொழுது இங்கே அமைதியான உணர்வு ஏற்படுகிறது" என்று ஆலியா கூறினார்.
 
ஆலியா பட் தற்போது கரண் ஜோஹரின் படமான "தக்த் மற்றும் அயன் முகர்ஜியின் "பிரம்மஸ்திர" படத்தில் ரன்பீருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இந்த இரண்டு படங்களும் லாக்-டவுன் காரணமாக தாமதமாகியுள்ளது.


(செய்தி: ஹேமலதா.எஸ்)