Rahul Gandhi Sheryln Chopra: நடிகை ஷெர்லின் சோப்ரா சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுபவர்களுள் ஒருவர். சமூக வலைதளங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் ஷெர்லின் எப்போதும் ஏதாவது ஒன்றை செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஷெர்லின் அவரது உடைகள் முதல் சிறிய விஷயங்கள் வரை அனைத்து விஷயங்கள் மூலம் லைம்லைட்டில் நீடிக்கிறார் எனலாம். சமீபத்தில் இவரது வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ஷெர்லின் கூறிய கருத்துகளால் அவர் மீண்டும் ஒரு சர்ச்சை சுழலில் சிக்கினார். முன்னாள் காங்கிரஸ் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தியை திருமணம் செய்ய ஷெர்லின் சம்மதம் தெரிவித்து அவர் பேசிய வீடியோ தான் அது. 


இந்த வைரலான வீடியோவில், ராகுல் காந்தியை திருமணம் செய்வது குறித்து ஷெர்லின் கூறியுள்ளார். ஷெர்லின் இந்த வீடியோவை பிரபல புகைப்படக் கலைஞரின் இன்ஸ்டாகிராம் பக்கமான Filmigyan பகிர்ந்துள்ளார். குறிப்பாக, இந்த வீடியோவில், ஒரு நபர் ஷெர்லினிடம் ராகுல் காந்தியை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்களா என்று கேட்கிறார். 


ஷெர்லின் ஆம் என்று பதிலளித்தார். தொடர்ந்து,"எனக்கு ஒரே ஒரு நிபந்தனை உள்ளது. அதாவது, திருமணத்திற்குப் பிறகு, எனது குடும்பப்பெயர் சோப்ராவாகவே இருக்கும்" என்றார். ஷெர்லின் அந்த நேரத்தில் ஒரு கடற்கரையில் இருந்தார். இந்த வீடியோவில், அவரது ரசிகர்கள் பலர் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர். அவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 


வைரல் வீடியோ: 



மேலும் படிக்க | ராகுல்காந்தி மீண்டும் நாடாளுமன்றம் செல்வது எப்போது... மக்களவை செயலகம் கூறுவது என்ன..!


ஷெர்லினின் இந்த வீடியோ வைரலானதையடுத்து, நெட்டிசன்கள் இது குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு நெட்டிசன்,'ராகுல் காந்தி தன் வாழ்க்கையை கெடுத்துக்கொள்ள விரும்பமாட்டார்' என்றார். மற்றொரு நெட்டிசன், 'அவர் உங்களை ஒருபோதும் திருமணம் செய்து கொள்ள மாட்டார்' என்றார். மூன்றாவது நெட்டிசன் ஷெர்லினை ட்ரோல் செய்து, 'நீங்கள் செய்வீர்கள் ஆனால் அவர் மாட்டார்' என்று குறிப்பிட்டார்.


ஷெர்லினைப் பற்றி பார்த்தோமானால், இந்தி பிக்பாஸ் வீட்டில் இருந்து சஜித் கானை வெளியேற்ற அவர் கடுமையாக முயற்சித்தபோது அவரது பெயர் வெளிச்சத்திற்கு வந்தது. ஆனால், அவர் தன் பணியில் தோல்வியடைந்தார். ஷெர்லினும் சஜித் வெளியேற மேற்கொண்ட நடவடிக்கைகளால் காவல் நிலையம் வரை சென்றார். அதுமட்டுமின்றி, அவர் மீது புகார் அளித்துள்ளார்.


இது ஒருபுறம் இருக்க, சோனியா காந்தி ஒருமுறை, ராகுல் திருமணம் செய்ய தயாராக இல்லை, அவருடைய திருமணத்தை பார்க்க வேண்டும் என்று கூறினார். எனவே இப்போது திருமணம் செய்து கொள்ளுமாறு லாலு யாதவ் ராகுல் காந்தியை அறிவுறுத்தினார். லாலு பிரசாத் யாதவ் தனது உரையில் ராகுல் காந்தியின் தாடியை எடுக்கவும் அறிவுரை கூறினார்.


மேலும் படிக்க | ராகுல்காந்திக்கு அனுமதி வழங்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ