பாலிவுட் பிரபல தீபிகா படுகோனேவின் அபார திறமைக்கு பரிசாக அவரை TINGS லண்டன் கௌரவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் பத்மாவத் திரைப்படத்தின் மூலம் பல்வேறு சர்சைகளை சந்தித்தவர் தீபிகா படுகோனே. எனினும் இந்நிகழ்வுகளால் பாலிவுட் ரசிகர்களிடம் இவருக்கு மவுசு குறைந்துவிடவில்லை.


திரையுலகிற்குள் காலடி எடுத்துவைத்த சில காலத்திலேயே உலகளவில் புகழ் பெற்றார். இந்திய படங்களில் மட்டும் அல்லாமல் ஹாலிவுட் படங்களிலும் காலடி எடுத்துவைத்தார்.


‘Queen of 100 crores’ என்று அழைக்கப்படும் இவரின் கைவசம் தற்போது பல படங்கள் காத்திருக்கின்றன. இந்த வார்த்தையினை நிரூபிக்கும் வகையில் இவரது சமீபத்திய திரைப்படமான பத்மாவத் 300 கோடி ரூபாய் வசூளித்து சாதனைப் படைத்தது.


இந்நிலையில் இவரை கௌரவிக்கும் வகையில் TINGS லண்டன் இவரது புகைப்படத்தினை அட்டைப் படமாக பயன்படுத்தியுள்ளது. TINGS பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் இடம் பெற்ற முதல் இந்திய நடிகை என்னும் பெருமையினை இதன்மூலம் இவர் பெற்றுள்ளார்!