நடிகர் அஜித்குமாரின் வலிமை திரைப்படம் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீஸாகியிருக்கிறது. விடியவிடிய காத்திருந்து முதல் நாள் முதல் ஷோவை பார்த்த ரசிகர்களுடன் சேர்ந்து திரைப் பிரபலங்களும் வலிமையை கண்டுகளித்தனர். படத்தின் தயாரிப்பாளர் போனிக்கபூர் மற்றும் நடிகை ஹூமா குரேஷி, நடிகர் கார்த்திகேயா ஆகியோர் சென்னை ரோகிணி திரையரங்கில் வலிமை படத்தை கண்டுகளித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அஜித்துக்கு வலிமை சேர்த்திருக்கிறதா வலிமை? விமர்சனம்


அப்போது, போனிக்கபூரின் காருக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர். முதல் நாள் முதல் ஷோவுக்கு சென்ற அருண் விஜய், சிறந்த ஆக்ஷன் படம் எனக் கூறியுள்ளார். குறிப்பாக பைக் சேஸிங் பிரமாதமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள அருண் விஜய், ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் காத்திருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்




நடிகை யாஷிகா ஆனந்தும் வலிமை திரைப்படத்தின் முதல்நாள் முதல் ஷோவை பார்த்து, டிவிட்டரில் நெருப்பு சிமிலியை பதிவிட்டுள்ளார். இயக்குநர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பிரபலங்களும் வலிமை படத்தின் முதல் காட்சியை பார்த்துள்ளனர். இதேபோல் திலீப் சுப்பராயன், "நான்கு மணி காட்சி தொடங்கியிருக்கிறது, பவர் மற்றும் ஸ்பீட் உணர முடிகிறது" என ட்வீட் செய்திருந்தார். 



வரலட்சுமி சரத்குமார், விக்னேஷ் சிவன் ஆகியோரும் வலிமை படத்துக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். சட்டமன்ற தேர்தலின்போது தான் வெற்றி பெற்றால் வலிமை அப்டேட் வாங்கித் தருவதாக கூறிய வானதி சீனிவாசன், வலிமை படத்துக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவரைத் தொடர்ந்து பல்வேறு திரைப்பிரபலங்களும் வலிமை படத்துக்கு வாழ்த்துகளை கூறியுள்ளனர். வலிமை படத்துக்கு கிடைத்துள்ள ஆதரவுக்கு இயக்குநர் ஹெச்.வினோத் நன்றி தெரிவித்துள்ளார். 


 



மேலும் படிக்க | வலிமை திரைப்படத்துக்கு ரசிகர்களின் டிவிட்டர் ரியாக்ஷன்..!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR