வலிமை திரைப்படத்துக்கு ரசிகர்களின் டிவிட்டர் ரியாக்ஷன்..!

நடிகர் அஜித்குமாரின் ‘வலிமை’ திரைப்படத்துக்கு ரசிகர்கள் டிவிட்டரில் தெரிவித்துள்ள ஒன்லைன் ரியாக்ஷன்.

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 24, 2022, 09:28 AM IST
  • உலகம் முழுவதும் ரிலீஸானது வலிமை திரைப்படம்
  • டிவிட்டர் டிரெண்டிங்கில் இடம்பிடித்திருக்கும் வலிமை
  • படம் மாஸாக இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து
வலிமை திரைப்படத்துக்கு ரசிகர்களின் டிவிட்டர் ரியாக்ஷன்..! title=

நடிகர் அஜித்குமார் - ஹெச்.வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணியில் உருவாகியிருக்கும் வலிமை திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. அஜித் ரசிகர்களின் 3 ஆண்டு காத்திருப்புக்கு பின் வெளியாகியிருக்கும் திரைப்படம் என்பதால், வலிமை படத்தைக் காண நேற்று மாலை முதலே திரையரங்குகளுக்கு படையெடுக்க தொடங்கினர். தமிழகம் முழுவதும் தியேட்டர்கள் முன்பு குவிந்த ரசிகர்கள், அஜித்தின் கட் அவுட்டுகளுக்கு பிரம்மாண்ட மாலை அணிவித்து, ஆட்டம் பாட்டம் என கொண்டாடி மகிழ்ந்தனர்.

 

காலை 5 மணிக்கு படம் திரையிடப்பட்டதும், முண்டியடித்துக் கொண்டு தியேட்டர்களுக்குள் நுழைந்த ரசிகர்கள், படத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும், படம் குறித்த ரியாக்ஷ்னை உடனுக்கு உடன் டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் அப்டேட் செய்து கொண்டே இருந்தனர். அவர்கள் கொண்டாடிய அளவுக்கு, ரசிகர்களின் எதிர்பார்ப்பை வலிமை பூர்த்தி செய்ததா? என்றால், இப்போது வெளியாகியிருக்கும் ரியாக்ஷன்களின்படி, பூர்த்தி செய்திருக்கிறது என்றே சொல்லலாம்.

படம் சூப்பராக வந்திருப்பதாகவும், ஆக்ஷன் காட்சிகளும், அஜித் பேசும் வசனங்களும் மாஸாக இருப்பதாக கூறியிருக்கும் ரசிகர்கள், முதல் பாதி மிகவும் சிறப்பாக இருப்பதாக கூறியுள்ளனர். இரண்டாவது பாதியில் குறிப்பிட்ட சில இடங்களில் தொய்வு இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். யுவனின் பிஜிஎம், காமெடி ஆகியவை பிளாட்டாக உள்ளது என கூறியுள்ளனர். கடந்த சில படங்களில் அஜித்துக்கு வலு சேர்த்த அளவுக்கு இந்தப் படத்தில் யுவனின் பிஜிஎம் இல்லை என ஒரு சிலர் கூறியிருந்தாலும், இன்னும் சிலர் தரமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News