நீலம் திரைப்படத்திற்கு தணிக்கை குழு சான்றிதழ் தர மறுப்பு தெரிவித்துள்ளது என படத்தின் இயக்குனர் வெங்கடேஷ் கூறியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதைக்குறித்து அவர் கூறியதாவது:- நீலம் திரைப்படத்தின் முன்னோட்டம் தணிக்கை குழுவால் மறுக்கப்பட்டது இத்திரைப்படம் ஈழ தமிழர்களை பற்றி உள்ளதால் மற்றும் போராளிகளின் வாழக்கையை தழுவி எடுக்க பட்டதால் இத்திரைப்படத்திற்கு தணிக்கை குழு சான்றிதழ் தர மறுப்பு தெரிவித்துள்ளது.


இத்திரைப்படம் எனது 5 வருட உழைப்பு, தணிக்கை குழுவின் முடிவு என்னை மிகவும் பாதித்துள்ளது. இது தமிழருக்காக எடுக்கப்பட்ட படம். ஆனால் தணிக்கை குழு சான்றிதழ் தர மறுக்கிறது. எனக்கு நீதி தேவை என இயக்குனர் வெங்கடேஷ் கூறியுள்ளார்.