NTR-க்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் - சந்திரபாபு!
ஆந்திராவின் முன்னாள் முதல்வர் NT ராமாராவ் அவர்களுக்கு ‘பாரத் ரத்னா’ விருது வழங்க வேண்டும் என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்!
ஐதராபாத்: ஆந்திராவின் முன்னாள் முதல்வர் NT ராமாராவ் அவர்களுக்கு ‘பாரத் ரத்னா’ விருது வழங்க வேண்டும் என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்!
தெலுங்கு திரைப்படங்கள் மூலம் மக்களிடம் அறிமுகமாகி தனக்கென ஒரு தனி அடையாளத்தினை பதித்தவர் NTR. தெலுங்கு திரையுலகில் தனி சகாப்தமாக விளங்கியவர், சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து ‘தெலுங்கு தேசம்’ என்னும் கட்சியினை துவங்கினார்.
இவரது வாழ்க்கை வரலாற்றினை திரைப்படமாக அவரது மகன் பாலகிருஷ்ணா நடிக்க திரைப்படமாக உறுவாக்கி வருகின்றனர். விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கின்றது.
சினிமா துறைக்கும், பொதுவாழ்விலும் அவர் செய்த பணிகள் மற்றும் அவரது பெருமைகளை எடுத்துறைக்கும் இப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் இப்படக்குழுவினர் படத்தின் படப்பிடிப்பு கள புகைப்டங்களை இணைத்து படத்தினை குறித்த சில குறிப்புகளை வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆந்திராவின் முதல்வரும், NTR அவர்களின் மருமகனுமான சந்திரபாபு நாயுடு அவர்கள் NT ராமாராவ் அவர்களுக்கு ‘பாரத் ரத்னா’ விருது வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.