`சந்திரமுகி 2` படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட லைகா.. வீடியோ வைரல்
சந்திரமுகி 2 படத்தின் முதல் சிங்கள் பாடலை அடுத்து இப்போது இரண்டாம் சிங்கள் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது. தற்போது இதன் Promo வீடியோ இணையத்தில் வைரலாக பார்க்கப்படுத்து வருகிறது.
ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருந்த சந்திரமுகி திரைப்படம் 2005 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் ஜேதிகா, நயன்தாரா, வடிவேலு, பிரபு, வினீத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதன் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக உள்ளது.
சந்திரமுகி 2 :
ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் ‘வேட்டையபுரம் அரண்மனை’. இதில் உள்ள ஆபத்து தெரியாமல் தங்களது குடும்பத்தினருடன் குடிபுகும் கணவன்-மனைவி. பேய் படம் என்று நினைத்தால் ட்விஸ்டாக வந்து நிற்கிறது ‘Split Personality Disorder’. இதனால் சந்திரமுகி எனும் கதாப்பாத்திரமாக மாறும் நாயகி. இறுதியில் நடந்தது என்ன? இப்படி பரபர கதையம்சத்துடன் 2005 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் மனங்களில் இன்றும் நீங்கா இடத்தை பிடித்துள்ள படம், சந்திரமுகி. மலையாளத்தில் 1993 ஆம் ஆண்டு ரிலீஸான ‘மணிசித்ரதாழு’ எனும் படத்தின் தமிழ் ரீ-மேக் ஆக வெளிவந்த படம்தான் சந்திரமுகி. இந்த படத்தை பி.வாசு இயக்கியிருந்தார். இப்படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது.
இரண்டாம் பாகம்..
சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2021 ஆம் ஆண்டு வெளியானது. முதல் படத்தின் ஹீரோ ரஜினிகாந்த், இந்த படத்திலும் ஹீரோவாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரது பரம ரசிகரான ராகவா லாரன்ஸ்தான் இதில் ஹீரோவாக நடிக்கிறார். பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ராணாவத் இதில் நாயகியாக நடிக்கிறார். வடிவேலு, சிருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் இதில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு முடிவிற்கு வந்தது.
முதல் பாடல்:
‘சந்திரமுகி 2’ படத்திற்கு எம்.எம். கீரவாணி இசையமைத்துள்ளார். இவர், ஆர்.ஆர்.ஆர் படத்திற்காக ஆஸ்கார் விருது வாங்கி உலகம் முழுவதும் பிரபலமானார். சந்திரமுகி 2 படத்தின் முதல் பாடல், சில தினங்களுக்கு முன்பு வெளியானது. லிரிக்கல் வீடியோவாக வெளியாகியிருந்த இந்த பாடலுக்கு ‘ஸ்வாகதாஞ்சலி’ என்று பெயரிடப்பட்டிருந்தது. இதில் படத்தின் நாயகி கங்கனா ரணாவத் நடனமாடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. ராகவா லாரன்ஸ், வேட்டையன் ராஜாவின் கெட்-அப்பில் இருக்கும் புகைப்படமும் இதில் இடம் பெற்றிருந்தது. இப்பாடலுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பினை கொடுத்துள்ளனர். அதேபோல் இந்த படத்தில் 10 பாடல்கள் இடம்பெற்றுள்ளதாக இசையமைப்பாளர் கீரவாணி முன்னதாக தெரிவித்து இருந்தார்.
இரண்டாவது பாடல்:
இந்நிலையில் சம்பித்தில் வெளிவந்த டப்பிங் வீடியோவும் நன்கு பேசப்பட்டது..முதல் சிங்கள் பாடலை அடுத்து இப்போது இரண்டாம் சிங்கள் ப்ரோமோ வீடியோ வந்துள்ளது. இந்த Promo வீடியோ இணையத்தில் வைரலாக பார்க்கப்படுத்து வருகிறது. படம் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக காத்துள்ளது.
மேலும் படிக்க | சூப்பர்ஸ்டார் என்றாலே ரஜினி தான்: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சத்யராஜ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ