சீதா ராமன் அப்டேட்: சுபாஷ்க்கு சொப்னா கொடுத்த அதிர்ச்சி.. காத்திருக்கும் பெரிய ட்விஸ்ட்

Seetha Raman Today's Episode Update: வீட்டிற்கு வந்த சீதா.. சுபாஷ்க்கு சொப்னா கொடுத்த அதிர்ச்சி - சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 21, 2023, 12:26 PM IST
  • அதிர்ச்சி அடையும் சுபாஷ்.
  • சத்யனின் கல்யாண பத்திரிகை.
  • ராமை அடித்த சேது.
சீதா ராமன் அப்டேட்: சுபாஷ்க்கு சொப்னா கொடுத்த அதிர்ச்சி.. காத்திருக்கும் பெரிய ட்விஸ்ட் title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.

சீதா ராமன் : இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன், இந்த சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் சீதாவும் துரையும் சொப்னா வீட்டிற்கு வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதிர்ச்சி அடையும் சுபாஷ்

அதாவது இவர்கள் வீட்டிற்கு வர சொப்னா இவர்களை அழைத்து உட்கார வைத்து சுபாஷை அழைத்து வர இவர்களை பார்த்து சுபாஷ் அதிர்ச்சி அடைகிறான். சொப்னா இவர் தான் என் கணவர் என்று அறிமுகம் செய்து வைக்க சுபாஷ் அதிர்ச்சியில் எதுவும் பேசாமல் இருக்க உங்க ஹஸ்பண்ட் எதுவும் பேச மாட்டாரா, வெக்கபடுறாரா என்று கேட்க சொப்னாவின் தம்பி அவர் வெக்கம்லாம் பட மாட்டார், போல்ட்டா பேசுவார் என்று சொல்ல சீதா சிரிக்கிறாள். 

பிறகு சொப்னா இவங்க என் ப்ரண்டு என்று சொல்லி சீதாவை அறிமுகம் செய்து வைத்த இவங்க வீட்டில ஒரு கல்யாணம் இருக்கு அதுக்கு நாம ரெண்டு பேரும் தான் போகணும் என்று சொல்ல சுபாஷ் ஷாக்காக சீதா ஆமா நீங்க ரெண்டு பேரும் வந்து தான் இந்த கல்யாணத்தை நடத்தி வைக்கணும், மீராவுக்கு  ரெண்டு அண்ணன்கள் இருக்காங்க. அன்னைக்கு குண்டாக இருந்த ஒருத்தரை பார்த்தீங்கல அவர் தான், இன்னொருத்தர் போர்வை போத்திட்டு வந்தார்ல அவர் தான், பெரிய பிராடு என்று சொல்லி சீதா சுபாஷை வெறுப்பேற்றி விட்டு வீட்டிற்கு கிளம்புகிறாள். 

சத்யனின் கல்யாண பத்திரிகை

அதனது தொடர்ந்து வீட்டிற்கு வர அங்கு அர்ச்சனா ஆரஞ்ச் பழத்தை சாப்பிட்டு வேண்டும் என்றே தோலை கீழே போட்டு கொண்டிருக்க அதை பார்த்து சீதா கடுப்பாகி அந்த தொலையெல்லாம் எடுத்து அர்ச்சனா புடவையில் போட்டு அதிர்ச்சி கொடுக்கிறாள்.

பிறகு சத்யன் அடித்த கல்யாண பத்திரிகை வீட்டிற்கு வர நாமளும் பத்திரிகை அடிக்கணும் என்று சீதா சொல்ல மீரா எதுக்கு அதெல்லாம், இந்த கல்யாணம் நடக்குமானே தெரியலை என்று வருத்தப்பட ராம் நான் பேசுறேன் என முடிவெடுக்கிறான்.

மேலும் படிக்க | மீண்டும் 'கேப்டன் மில்லர்' இயக்குனருடன் கைகோர்த்த நடிகர் தனுஷ்

ராமை அடித்த சேது

அடுத்ததாக அவன் அப்பாவை சந்தித்து பத்திரிக்கை அடிக்க கூப்பிட ஒ நீ அவ்வளவு பெரிய மனுஷனாகிட்டியா என்று சொல்ல நீங்க முதல்ல எனக்கு கல்யாணம் பண்ணாமல் அத்தைக்கு கல்யாணம் பண்ணி இருக்கணும் என்று சொல்ல சேது ராமை பளாரென அறைகிறான். உடனே மகா ஏன் இப்படி பண்றீங்க என்று சேதுவை திட்ட ராம் நீங்க வந்து தான் ஆகணும் என்று ஆர்டர் போட்டு விட்டு வெளியே கிளம்புகிறான். 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?

சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | சூப்பர்ஸ்டார் என்றாலே ரஜினி தான்: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சத்யராஜ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News