சந்திரமுகி 2: ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள படம், சந்திரமுகி 2. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சில நாட்களுக்கு நடைப்பெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ட்ரைலர் வெளியீடு:


சந்திரமுகி 2 படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. 2005ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி படத்தின் கதையின் தொடர்ச்சியாக இந்த கதை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அந்த படத்தில் வந்த முருகேசன் (வடிவேலு) கதாப்பாத்திரம் மட்டும் இந்த படத்தில் தொடருகிறது. 



இன்று வெளியாகியுள்ள ட்ரைலரில், பழைய சந்திரமுகி படத்தில் காண்பிக்கப்பட்டது போல ஒரு பாம்பு வருகிறது. லக்‌ஷ்மி மேனன், ராதிகா, வடிவேலு, சுரேஷ் சந்திரா, ஸ்ருஷ்டி டாங்கே உள்ளிட்ட பலர் இந்த ட்ரைலரில் இடம் பெற்றுள்ளனர். ”இந்த அரண்மனையில் என்ன நடந்தது..?” என்று ஒரு சாமியார் கேட்க, “அது 17 வருடங்களுக்கு முன்னாள் நடந்தது..” என்று வடிவேலு ஃப்ளாஷ்பேக் சொல்வது போல ஒரு காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த ட்ரைலர் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகிறது. 


மேலும் படிக்க | குஷி படத்தில் அதிக சம்பளம் வாங்கியது யார்? விஜய் தேவரகொண்டாவா? சமந்தாவா?


17 வருடங்களுக்கு பின்பு மீண்டும் ரிப்பீட்!


மலையாளத்தில் 1993ஆம் ஆண்டு ரிலீஸான ‘மணிசித்ரதாழு’ எனும் படத்தின் தமிழ் ரீ-மேக் ஆக வெளிவந்த படம்தான் சந்திரமுகி. இதில், ஷோபனா சந்திரமுகியாக நடித்திருப்பார். ஆள் அரவமற்ற ஏரியாவில் ‘வேட்டையபுரம் அரண்மனை’. இதில் உள்ள ஆபத்து தெரியாமல் குடும்பத்தினருடன் இங்கு குடிபெயரும் கணவன்-மனைவி. பேய் படம் போலவே கொண்டு சென்று கடைசியில் ‘Split Personality Disorder’ என்று ட்விஸ்டு வைக்கின்றனர். இதனால் சந்திரமுகி எனும் கதாப்பாத்திரமாக மாறிவிடுகிறாள் நாயகி. க்ளைமேக்ஸில் நடந்தது என்ன? இப்படி பரபர கதையம்சத்துடன் 2005ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் மனங்களில் இன்றும் நீங்கா இடத்தை பிடித்துள்ள படம், சந்திரமுகி. இந்த படத்தை பி.வாசு இயக்கியிருந்தார். இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக உள்ளது. 


முன் ஜென்ம பகை?


சந்திரமுகி 2 ட்ரைலரில், “200 வருட பகை..” என்று ஒரு சாமியார் பேசுவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இதனால், இந்த படத்தில் வேட்டையன் ராஜாவை பழி வாங்க உண்மையாகவே சந்திரமுகி பேய் களமிறங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கு முன்னர் 2005ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படம் சைக்காலஜி த்ரில்லராக இருந்தது. இதையடுத்து அதன் இரண்டாம் பாகம் உண்மையாகவே பேய் கதையாக இருக்கும் என கூறப்படுகிறது. இதில், சந்திரமுகி மற்றும் வேட்டையன் ராஜாவின் ஃப்ளேஷ் பேக் காண்பிக்க படலாம் என சினிமா வட்டாரங்களில் பேசி வருகின்றனர். 


படத்தில் பத்து பாடல்கள்:


ஆர்.ஆர்.ஆர் படம் மூலம் உலகறியும் அளவிற்கு பிரபலமானவர் கீரவாணி. இவர், சந்திரமுகி 2 படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாடல், சில வாரங்களுக்கு முன்னர் வெளியானது. லிரிக்கல் வீடியோவாக வெளியாகியிருந்த இந்த பாடலுக்கு ‘ஸ்வாகதாஞ்சலி’ என்று பெயரிடப்பட்டிருந்தது. இதில் படத்தின் நாயகி கங்கனா ரணாவத் நடனமாடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. ராகவா லாரன்ஸ், வேட்டையன் ராஜாவின் போல தோற்றமளிக்கும புகைப்படமும் இதில் இடம் பெற்றிருந்தது. இப்பாடலுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பினை கொடுத்தனர். இதையடுத்து இந்த பாடலில் மொத்தம் 10 பாடல்கள் இருப்பதாக இசைமைப்பாளர் கீரவாணி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். சமீபத்தில் நடைப்பெற்ற இசை வெளியீட்டு விழாவிற்கு பிறகு சந்திரமுகி 2 படத்தின் 10 பாடல்களும் வெளியிடப்பட்டுள்ளது. படம் வரும் 15ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | தளபதி 68 படத்தில் விஜய்யுடன் நடிக்க மறுத்த ஜோதிகா..! வேற ஹீரோயின் பாத்தாச்சு..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ