Serial Actor Arnav Ex Wife Post About Anshitha : தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பையும் விமர்சத்தையும் பெற்ற நிகழ்ச்சிகளுள் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியை, 7வது சீசன் வரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். தற்போது, புதிய ஹோஸ்ட் விஜய் சேதுபதி வந்திருக்கிறார். “ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு” என்ற தீம்-உடன் இந்த நிகழ்ச்சியின் 8வது சீசன் துவங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக இந்த இல்லத்தில் நடக்கும் விஷயங்கள் தற்போது கண்டன்ட் ஆகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிக்பாஸ் 8:


பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன், கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 6ஆம் தேதி) தொடங்கியது. இதில் புதிதாக வடிவமைக்கப்பட்ட பிக்பாஸ் வீடு, புது ரூல்ஸ், புதிய தொகுப்பாளர் என அனைத்துமே புதிதானவையாக இருந்தன. புதிய ஹோஸ்ட் விஜய் சேதுபதி, இந்த நிகழ்ச்சியை சரியாக கையாள்வாரா? கமல்ஹாசன் போல பேசுவாரா? நடுநிலையாக அவரால் இருக்க முடியுமா? என்றெல்லாம் பல்வேறு கேள்விகள் எழுந்தன. இவற்றுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில், முதல் நாளிலேயே அனைத்து பால்களையும் பவுன்டரிக்கும் சிக்ஸருக்கும் பறக்க விட்டார். இதனால், ரசிகர்களுக்கு இவர் மீது புதிய நம்பிக்கை பிறந்திருக்கிறது. 


சர்ச்சை ஜோடி:


பிக்பாஸ் இல்லத்திற்குள் எப்போதும் ஒரு ஜோடி இருக்கும். அந்த ஜாேடி வெளியில் இருந்தே ஒன்றாக வந்தவர்களாக இருப்பர். அல்லது, இங்கு வந்து ஒன்று சேர்ந்தவர்களாக இருப்பர். அப்படி, 8வது சீசனுக்குள் நுழைந்திருக்கும் ஜோடிதான், அர்ணவ்-அன்ஷிதா. இவர்கள் இருவரும் ஒன்றாக செல்லம்மா சீரியலில் ஒன்று சேர்ந்து நடித்தனர். 


அர்ணவ், ஏற்கனவே திருமணம் ஆனவர். இவர், திவ்யா என்ற சீரியல் நடிகையை மணம் முடித்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. இந்த திருமண வாழ்க்கையில் இருக்கும் போதே அர்ணவ் அன்ஷிதாவுடன் காதல் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், தன்னை அன்ஷிதா தவறாக பேசியதாக கூறி, திவ்யா காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து, இந்த பிரச்சனைகள் அனைத்தும் ஓய்ந்த பிறகு அன்ஷிதாவும் அர்னவ்வும் உறவில் இருந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் பிக்பாஸ் இல்லத்திற்குள் ஒன்றாக நுழைந்திருக்கின்றனர். இதையடுத்து திவ்யா ஒரு வீடியோவை பதிவிட்டிருக்கிறார். 


மேலும் படிக்க | பிக்பாஸ் 8: 2வதாக எவிக்ட் ஆகும் போட்டியாளர் யார்? டேஞ்சர் லிஸ்டில் ‘இவர்’!


வைரல் பதிவு..


மனசிலாயோ பாடலுக்கு நடனமாடி வீடியாே வெளியிட்டிருக்கும் அவர், “அனைத்து நல்ல விஷயங்களும் ஒரு நாள் முடிவுக்கு வந்துதான் ஆகணும்” என்று கேப்ஷனில் குறிப்பிட்டிருக்கிறார். அன்ஷிதா-அர்ணவ் பிக்பாஸிற்குள் நுழைந்ததில் இருந்து இருவருக்கும் வெளியில் நெகடிவ் விமர்சனங்கள் அதிகரித்துள்ளது. இதை வைத்து, அவர் இப்பதிவை வெளியிட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. 


 



போட்டியாளர்கள்:


பொதுவாக, பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் கொஞ்சம் பிரபலமான முகங்களைத்தான் போட்டியாளர்களாக இறக்குவர். அவர்கள், தொலைக்காட்சி தொடர் நடிகர்களாகவும், டிஜிட்டல் பிரபலங்களாகவும், திரைப்படங்களில் நடித்த துணை கதாப்பாத்திரங்களாகவும் இருப்பர். 


அந்த வகையில், இந்த பிக்பாஸ் சீசனுக்கும் 18 பேர் வந்துள்ளனர். இதில், பெரும்பாலானோர் விஜய் தொலைக்காட்சியின் ஆட்களாகவே இருக்கின்றனர். ஜாக்குலின், சுனிதா, விஜே விஷால், முத்துக்குமரன், தீபக், தர்ஷிகா என இவர்கள் அனைவரும் விஜய் டிவி மூலம் பிரபலமானவர்கள்தான். 


மேலும் படிக்க | பிக்பாஸ் 8: முதல் நாளிலேயே வெளியேறும் பெண் பாேட்டியாளர்! யார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ