விஜய் படத்துக்கு ‘மெர்சல்’ தலைப்பை பயன்படுத்த தடை இல்லை - ஐகோர்ட்
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100_வது படமாக தயாரித்துள்ளது. கிட்டத்தட்ட ரூ.130 கோடியில் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. மெர்சல்’ படத்தின் டீசர் வெளியாகி பார்வையாளர்கள் மத்தில் பெரும் வரவேற்ப்பை பெற்று சாதனை படைத்து வருகிறது. மேலும் இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என கூறிய நிலையில், தயாரிப்பாளர் ராஜேந்திரன் ‘மெர்சல்’ என்ற தலைப்பை பயன்படுத்தகூடாது என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அக்டோபர் 3-ம் தேதி வரை ‘மெர்சல்’ என்ற தலைப்பில் படத்தை விளம்பரப்படுத்தக் கூடாது என தடை விதித்து ஆணை பிறப்பித்தது.
கடந்த அக்டோபர் 3-ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு சார்பிலும் விளக்கங்கள் அளிக்கப்பட்டன. பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பை அக்டோபர் 6-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்த நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், மெர்சல் திரைப்படத்தின் பெயருக்கு தடை இல்லை. ‘மெர்சல்’ என்ற தலைப்பை பயன்படுத்த கூடாது என தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பால் விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைத்துள்ளனர்.