தி ஆஷ்ரம் பள்ளிக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற, கட்டட உரிமையாளருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை கிண்டியில் லதா ரஜினிகாந்துக்கு சொந்தமான ஆஷ்ரம் பள்ளிக்கூடம் இயங்கி வந்தது. வாடகை தரவில்லை என்று கூறிகட்டடத்தின் உரிமையாளர் பள்ளியைப் பூட்டினார். இதையடுத்து, பள்ளி மாணவர்கள் வேளச்சேரியில் உள்ள வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டனர்.


முன்னதாக சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நேற்று வழக்குகளை விசாரிக்க தொடங்கினார். அப்போது வக்கீல் இளம்பரிதி ஆஜராகி, ‘ஆஷ்ரம் பள்ளி கட்டிடத்துக்கு பூட்டு போட்ட அதன் உரிமையாளரின் நடவடிக்கையினால், பள்ளியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. 


இதனால், அந்த உரிமையாளரிடம் இருந்து ரூ.5 கோடி இழப்பீடு கேட்டும், பூட்டை அகற்றக்கோரியும், பள்ளிக்கூடத்தின் செயலாளர் ஐஸ்வர்யா தனுஷ் வழக்கு தொடர உள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.


இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி மாணவர்களின் நலன் கருதி பள்ளிக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கட்டட உரிமையாளருக்கு உத்தரவிட்டதோடு, பிற்பகல்குள் பள்ளிக் கட்டடத்தின் சீல் அகற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து வழக்கறிஞர் ஆணையர் குழு நேரில் ஆய்வு செய்து தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.