சென்னை மதுரவாயலில் பிரபல சங்கர நேத்ராலாய கண் மருதுத்துவமனையின் மருத்துவர் சுரேந்திரன் இல்லம் திருமண விழாவில் மணமக்கள் பத்ரி - இளவரசி புதுமண தம்பதிகளை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மலர் கூடை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொடர்ந்து திரைப்பட பாடல் ஆசிரியர் வைரமுத்து மணமக்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைரமுத்து கூறுகையில் "நான் சென்னையை சென்னை என்று மட்டும் அழைப்பதில்லை என் இரண்டாம் அன்னை சென்னை . நான் தமிழகத்தில் தென்மேற்கு தேனி மாவட்டத்தில் கிராமத்தில் பிறந்தவன். 


மேலும் படிக்க | விரைவில் முடிகிறது விடுதலை - உற்சாகத்தில் சூரி


18 வயதில் என்னை தத்தெடுத்தது சென்னை. பொன், பொருள், புகழ் தொழில் மட்டுமின்றி எனக்கு பெண் கொடுத்ததும் சென்னை தான். வந்தோரை வாழ வைக்கும் சென்னை. இதை சிங்கார சென்னை ஆக்கியதில் ஸ்டாலினுக்கு பெரிய பங்கு உண்டு , எங்கள் சிங்காரம் கலைந்தாலும் பரவாயில்லை சென்னையின் சிங்காரம் கலைய விடமால் காப்போம் என பணி செய்தார். 


கருணாநிதி சென்னையின் கட்டமைப்பை மாற்றினார். இந்தியாவின் தலைநகரம் எதுவானாலும் இந்தியாவிற்கு மருத்துவ தலைநகரம் சென்னைதான். சென்னை மக்கள் சென்னையின் தூய்மையை காக்க வேண்டும். சிங்கப்பூர், மெல்போர்ன், மாஸ்கோவுக்கு நிகராக கட்டமைப்பு தொழில், பண்பாடு உயர வேண்டும், கலை, இசை என்றால் சென்னைதான். சென்னையில் பிறந்தோர், வாழ்ந்தோர், இனி பிறப்போர், இங்கு வந்து சேருவோர் என அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். 


மேலும் படிக்க | உதகை அருகே தலைகுந்தா பகுதியில் கோவிலுக்குள் நுழைந்த கரடி


இலவசம் என்பது மக்களிடமிருந்து பெற்ற பணம். இந்தியா வளரும் நாடு, இந்தியா வளர்ந்த நாடாகும் வரை இலவசங்களை தவிர்க்க முடியாது.உலகின் உயர்ந்த பொருளான சூரிய ஓளி, காற்று, நீர் இலவசாக இருப்பதால் அடித்தட்டு மக்களுக்கு இலவசங்கள் கொடுப்பதில் தவறில்லை. எனது வரி உழைக்கும் மக்களுக்கு உணவாக போகிறது என்பதில் நான் பெருமை கொள்கிறேன் ".


மேலும் படிக்க | மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் ஆப்ரேஷன் தியேட்டர் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ