Chiyaan Vikram Veera Dheera Sooran Shooting Update: இயக்குநர் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகும், ‘வீர தீர சூரன்’ படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் சீயான் விக்ரம்:
தமிழ் சினிமாவின் திறமை மிகு நடிகர்களுள் ஒருவர் விக்ரம். கடின உழைப்பு, விடா முயற்சி, கதைகளை தேர்ந்தெடுத்தல் போன்ற பல விஷயங்களால் பிற ஹீரோக்களை விட இவர் தனித்து காணப்படுகிறார். பல்வேறு கஷ்டங்கள், மற்றும் வேதனைகளை கடந்து தான் இந்த நிலைக்கு வந்தார். இவர் நடிகராக அறிமுகமாவதற்கு முன்பே ஒரு டப்பிங் கலைஞராக சினிமாவில் தன்னுடைய பணியை துவங்கினார். இதை தொடந்து, கடந்த 1990 ஆம் ஆண்டு 'என் காதல் கண்மணி' என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு 1991ல் ‘தந்து விட்டேன் என்னை’ படத்தில் நடித்தார், அதன்பிறகு எஸ். பி. முத்துராமன் அவர்களின் படமான ‘காவல் கீதம்’ (1992) மற்றும் பி. சி. ஸ்ரீராம் அவர்களின் படமான ‘மீரா’ (1992) போன்ற படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. அதன் பின்னர், இரண்டாண்டுகள் தெலுங்கு மற்றும் மலையாளத் திரையுலகில் பிஸியாக இருந்த அவர், 1994 ஆம் ஆண்டில் ‘புதிய மன்னர்கள்’ என்ற படம் மூலமாக மீண்டும் தமிழுக்கு வந்தார். அப்படம், எதிர்பார்த்த வெற்றியைத் தராததால், மீண்டும் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் நடிக்கத் தொடர்ந்தார். 1997 ஆம் ஆண்டில், ‘உல்லாசம்’ என்ற படத்தில், அஜீத்குமாருடன் இணைந்து நடித்தார். 


சேது மூலம் ஹிட்டான விக்ரம்:
இதனிடையே கடந்த 1999 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் 'சேது' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ரிஸ்க் எடுத்து இந்த படத்தில் நடித்தது மட்டும் இன்றி, இப்படத்தின் வெற்றி விக்ரமை மற்றொரு தளத்திற்கு கொண்டு சென்றது. இதன் பிறகு இவர் நடித்த அனைத்து படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. 


மேலும் படிக்க | மோசடி வழக்கில் சிக்கிய மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள்... என்ன பிரச்னை?


பொன்னியின் செல்வன் 2 படம்:
கடந்த ஆண்டில் விக்ரம் நடிப்பில் பொன்னியின் செல்வன் 2 படம் வெளியானது. மணிரத்னம் இயக்கத்தில் மல்ட்டி ஸ்டாரர் படமாக வெளியான இந்தப் படத்தில் வழக்கம்போல தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார் விக்ரம்.


தங்கலான் மற்றும் துருவ நட்சத்திரம்:
நடிகர் விக்ரமின் தங்கலான் மற்றும் துருவ நட்சத்திரம் படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராக உள்ளன. இதில் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் ரிலீஸ் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


விக்ரமின் வீர தீர சூரன்:
இதனிடையே தற்போது இவர் இயக்குநர் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் ‘வீர தீர சூரன்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விக்முடன் எஸ்ஜே சூர்யா, துஷாரா விஜயன் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். மேலும் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு, பிரசன்னா படத்தொகுப்பு செய்கின்றனர். இந்தப் படத்தின் அறிமுக கிளிம்ப்ஸ் கடந்த ஆண்டிலேயே வெளியான நிலையில், கடந்த 17ம் தேதி விக்ரம் பிறந்தநாளையொட்டி படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டது. 


வீர தீர சூரன் படத்தின் படப்பிடிப்பு:
இந்நிலையில் வீர தீர சூரன் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் மதுரையில் விறுவிறுப்பாக தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



 மேலும் படிக்க | மே10ம் தேதி வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு திரைப்படம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ