கோப்ரா படத்திற்கு விக்ரம் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
கோப்ரா படத்திற்காக தயாரிப்பாளர் லலித் குமார் நூறு கோடிக்கும் அதிகமாக செலவு செய்து படத்தை எடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி 'கோப்ரா' திரைப்படம் வெளியானது. இந்த ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் பேனரின் கீழ் எஸ்.எஸ்.லலித் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் விக்ரம் கிட்டத்தட்ட பத்து வேடங்களில் நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ், இர்பான் பதான், ரோஷன் மேத்யூ, பத்மப்ரியா, கனிகா, மிர்னாலினி ரவி, மீனாட்சி, ரோபோ ஷங்கர் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். விநாயகர் சதுர்த்தி விடுமுறையை கொண்டாடும் வகையில் இந்த படம் வெளியானது. ரசிகர்கள் பலரும் விக்ரம் படத்தை திரையில் காண வேண்டும் என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில், கோப்ரா படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்த படத்தின் ட்ரெய்லர் மேற்கத்திய படங்களை மிஞ்சும் விதமாக அமைந்திருப்பதாக பல பாராட்டுகளையும் பெற்றது, இதில் நிறைந்துள்ள ஆக்ஷன் காட்சிகளும் பிரமிப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருந்தது. நடிகர் விக்ரமின் திரை பயணத்தில் இது ஒரு பெரிய பட்ஜெட் படமாக இருக்கும் என்று கூறப்பட்டது, இந்த படத்திற்காக தயாரிப்பாளர் லலித் குமார் நூறு கோடிக்கும் அதிகமாக செலவு செய்து படத்தை எடுத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது. மேலும் இந்த படத்தில் பத்து வேடங்களில் நடித்துள்ள விக்ரமுக்கு சம்பளமாக இருபத்தி ஐந்து கோடி ரூபாய் கொடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | மோசமான படங்கள் தோல்வியடையும்... என் படமே சாட்சி - சிரஞ்சீவி ஓபன் டாக்
இவ்வளவு பட்ஜெட் தொகையில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படம் வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் நாள் வசூல் தவிர அடுத்தடுத்த நாட்களில் வசூல் குறைந்தது. கோப்ரா படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ஹரிஷ் கண்ணன் டிஓபி ஆக இருக்கிறார், மேலும் இந்த படத்திற்கு ஜான் ஆப்ரஹாம் எடிட்டிங் பணிகளை செய்திருக்கிறார். 'கோப்ரா' படத்தை தொடர்ந்து மணி ரத்னம் இயக்கத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலனாக நடித்துள்ள 'பொன்னியின் செல்வன்-1' படம் செப்டம்பர்-30ம் தேதி வெளியாகவுள்ளது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் 3 நிமிடம் உள்ள கோப்ரா படம் இரண்டாம் நாள் முதல் 20 நிமிடம் கட் செய்யப்பட்டது.
மேலும் படிக்க | ஏ.ஆர். ரஹ்மானின் ஆஸ்தான பாடகர் மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ